1200 மில்லிகிராம் ஹெரோயின் போதைபொருளுடன் 02 சந்தேக நபர்ககைள் கைது ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நகரபகுதியில் 1200 மில்லிகிராம் ஹெரோயின் போதைபொருளுடன் இருவர் கைது செய்யபட்டுள்ளதாக ஹட்டன் கலால் தினைக்களத்தின் பொருப்பதிகாரி தெரிவித்தார்
இந்த கைது சம்பவமானது 30.05.2019. வியாழகிழமை மாலை வேலையில் இடம்பெற்றதாக தெரிவித்தனர்
ஹட்டன் கலால் தினைக்கள உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலை அடுத்து ஹட்டன் நகரில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது ஹட்டன் நகரில் வைத்து தம் வசம் எரோயின் போதை பொருள் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாக களாள் தினைக்கள உத்தியோகத்தர்களின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட இரண்டு சந்தேக நபர்களும் 31.05.2019.
வெள்ளிகிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட உள்ளதாக ஹட்டன களாள் தினைக்கள பொருப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.