அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சொல்வது ஒன்றும் செய்வது மற்றொன்றுமாக இருக்கிறது -உறுப்பினர் அஜ்மல்

பைஷல் இஸ்மாயில் -

சபையில் தீர்மானம் எடுப்பது ஒன்று ஆனால் நடைமுறையில் இருப்பது வேறொன்று இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடல்ல. எடுக்கின்ற தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற ஒரு சபையாக அட்டாளைச்சேனை பிரதேச சபை மாறவேண்டும் என்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.அஜ்மல் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 18வது அமர்வு (16) தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் இடம்பெற்றது. அங்கு அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சபையில் பல தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது. இந்தத் தீர்மாணங்கள் யாவும் சரியான முறையில் நிறைவேற்றப்படுகின்றதா? என்ற விடயத்தை நாம் அனைவரும் கவனத்திற்கொள்ளவேண்டும். இது தொடர்பில் கடந்த வருடமும், இவ்வருடமும் நான் சுட்டிக்காட்டி பேசியுள்ளேன்.

எம்மால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் யாவும் வெறுமனே சபையில் மட்டும் எடுத்துப் பேசிவிட்டு கலைகின்ற ஒரு சபையாக அட்டாளைச்சேனை பிரதேச சபை இருந்து விடாமல் ஒரு காத்திரமான முடிவுகள் எடுத்து அதை அமுல் படுத்துகின்ற ஒரு சபையாக இருக்கவேண்டும். என்று வேண்டிக்கொள்கின்றேன்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட எந்த பிரதேசத்திலாவது மேற்கொள்ளப்படுகின்ற எந்த அபிவிருத்தி வேலைகளாக இருந்தாலும் இந்த விடயங்கள் யாவும் சகல பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்திய பின்னர்தான் அவைகள் மேற்கொள்ளப்படும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது. இது அவ்வாறில்லாமல் தீர்மானத்துக்கு முரனகா நடைபெற்று வருகின்றது. தற்போது கம்பரெலிய வேலைத்திட்டம் எல்லா இடங்களிலும் நடைபெற்று வருகின்றது. அது சம்பந்தமான அறிவித்தல் எல்லோருக்கும் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தும் கூட இதுவரையும் எவ்வித அறிவித்தலும் கிடைக்கப்பெறவில்லை.

கடந்த சபை அமர்வின்போது 206 வது தீர்மானமாக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் காட்சிப்படுத்துகின்ற பெயர் பலகையில் குறித்த வட்டார பிரதேச சபை உறுப்பினரின் புகைப்படமும் அதில் இடம்பெறவேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது அதுவும் நடைமுறையில் இல்லை.

தீர்மானங்களை சரியான முறையில் நிறைவேற்றுகின்ற ஒரு சபையாக அட்டாளைச்சேனை பிரதேச சபை மாறுமாக இருந்தால் அது எமது பிரதேசத்துக்கும், எம்மை நம்பி வாக்களித்து அனுப்பிய மக்களுக்கும் ஒரு பிரயோசனமுள்ள ஒரு சபையாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று கேட்டுக்கொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -