பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்தல் பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார் இந்த செய்தியாளர் மாநாடு அலரி மாளிகையில் இன்று நடைபெற்றது. நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பாதுகாப்பு தொடர்பில் தெளிவுப்படுத்தி ஒரே வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். கல்வி அமைச்சு பெற்றுக்கொண்டுள்ள 18 விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் சுற்றறிக்கை பாடசாலை முக்கியஸ்தர்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன் போது சுட்டிகாட்டினார்.
முப்படை பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் வழங்கும் தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு அப்பால் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை இல்லை என்றும் அமைச்சர் சுட்டிகாட்டினார். பாடசாலை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் கடும் பாதுகாப்பை கொண்ட இடமாக அது பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அதனை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்த கல்வி அமைச்சர் அவ்வாறு பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
முப்படை மற்றும் பொலிஸ் தலைமை அதிகாரிகளுக்கு எழுத்து மூலமாகவும் வாய் மூலமாகவும் அறிவிக்கப்பட்டு அவர்களுடன் பல தீர்மானங்கள் எட்டப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். அனைத்து பாடசாலை வளவுகள் அதனை அண்டியுள்ள பகுதிகள் பரிசோதனை செய்து பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு பொலிஸார் உடன்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதற்கமைவாக பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைளையும் அரசாங்கம் என்ற ரீதியிலும் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பாடசாலை பாதுகாப்பு தொடர்பில் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர் பழைய மாணவர்களை போன்று மாணவர்களுக்கும் பொறுப்பு உண்டு. 18 விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு குறித்து தெளிவுப்படுத்தும் அந்த சுற்றறிக்கை மூலம் அதிபர்களுக்கு அறிவித்ததாகவும் அமைச்சர் கூறினார். இது பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அல்லது அவர்கள் மீது சுமத்தப்படும் ஒன்றல்ல. மாணவர்களின் பாதுகாப்பு இந்த சந்தர்ப்பத்தில் அனைவரது தேசியத்தை போன்று பிரஜைகளின் பொறுபாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
அனைத்து பாதுகாப்பு பிரிகளிலும் பாடசாலை பாதுகாப்பு தொடர்பில் தெளிவான உடன்பாடை பெற்றுக்கொண்டும் அனைத்து புலனாய்வு பிரிவுகளின் தகவல்களை பெற்று பாடசாலை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். கத்தோலிக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அது சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் அதிமேற்றிராணியருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் பொழுது பங்களிப்பு செய்து ஆகக்கூடிய ஒத்துழைப்பை வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன்களின் பாதுகாப்பு தொடர்பிலும் மேற்கொள்ளவேண்டிய ஒழுங்குமுறைகள் குறித்து பொலிஸாருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் சில வேன்கள் மாத்திரம் மாணவர்களை முன்கூட்டியே அழைத்து செல்வது தொடர்பிலும் கவனத்தில் கொள்ளுமாறும் பொலிஸாரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் வேன்களில் பாடசாலை மாணவர்களை ஏற்றிசெல்வது தொடர்பில் தேவையான முறையான நடைமுறைகளை முன்னெடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.