இதில் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க 122 ஆம் பிரிவில் உள்ள உள்ளுராட்சி நிறுவனங்களின் வருமானங்களை எற்படுத்துவதற்காக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 5 துணை விதிகள் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டன.
அத்தோடு கட்டாக்காளி மாடுகளின் நடமாட்டம் சம்பந்தமாகவும்
பாலமுனை மண்ணின் அபிவிருத்தியும் அதன் முன்னேற்றங்கள் பற்றியும் ஆராயப்பட்டன.
அத்துடன் நாட்டில் முஸ்லீம்களுக்கெதிரான ஊடக அடக்குமுறையை மேற்கொண்டுள்ள இனவாத ஊடகங்களைக் கண்டித்ததுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள் சக்தி ஊடகத்தின் எந்தவிதமான விளம்பரங்களையும் காட்சிப்படுத்த தடை விதிக்கும் தீர்மானங்கள் பற்றியும் பிரதேச சபையில் பல முடிவுகள் நிறைவேற்றப்பட்டன.
இத்தீர்மானத்தை சபையின் உறுப்பினர்கள் எல்லோராளும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டனர்.