அசாதாரண சூழ்நிலையை அடுத்து சிலாபத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்


சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலாபம் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை காலை 6 மணி வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் சம்பவமொன்று நடைபெறப்போவதாக முகநூலில் வந்த செய்தி ஒன்றையடுத்து அதன் உண்மைத்தன்மையை கூறுமாறு கோரி சிலாபத்தில் இன்று காலை நடந்த ஆர்ப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பொலிஸ் நிலையம் அருகே வந்த இளைஞர் குழு இந்த செய்திகளின் உண்மைத்தன்மையை கூறுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து கடைகள் அனைத்தும் நகரத்தில் மூடப்பட்டன.
ஆர்ப்பாட்டக்காரர்களை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைத்த இராணுவம் அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது.
இதனால் அங்கு பெரும் பதற்றநிலை தோன்றியதை அடுத்து சிலாபம் பொலிஸ் பிரிவில் இப்போது முதல் நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -