இன்று மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் இலக்கியங்களில் கவிதைகள் நூல் வெளியீடு!


காரைதீவு சகா-
ம்மாந்துறையைச்சேர்ந்த சபரகமுவ பல்கலைக்கழக தமிழ்த்துறையில் விசேட பட்டப்படிப்பை பூர்த்திசெய்த மாணவி ஏ.ஆர்.பாத்திமா றுமைசா தனது ஆய்வுக்காக ஆக்கிய 'மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் இலக்கியங்களில் கவிதைகள் - ஓர் ஆய்வு' என்ற நூல் வெளியீட்டுவிழா இன்று(26) ஞாயிற்றுக்கிழமை பி.ப.3மணிக்கு சம்மாந்துறையில் நடைபெறும்.

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் அதிபர் முத்து இஸ்மாயில் தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் கலந்துசிறப்பிப்பார்.
பேராசிரியர் றமீஸ் அப்துல்லா நூல் நயவுரையை நிகழ்த்தவுள்ளார். ஏற்புரையை நூலாசிரியை பாத்திமா றுமைசா நிகழ்த்துவார்.
முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத்துடன் நடைபெறும் இவ்விழாவினிறுதியில் இப்தார் நிகழ்வு இடம்பெறவிருக்கிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -