திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சருமாகிய அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது மூதூர் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வெள்ளிக் கிழமை (31) மாலை இடம் பெற்றுள்ளது.
அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் உள்ளிட்ட சமூகம் சார்ந்த விடயங்கள் நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ் நிலைகள் பற்றியும் இங்கு எடுத்துரைக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கம்பரெலிய , செமட்ட செவன வீடமைப்பு திட்டம் உள்ளிட்ட குறை நிறைகளும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் அரூஸ் , மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள்,அரச உயரதிகாரிகள்,திணைக்களத் தலைவர்கள், முப்படைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.