பாடசாலைசமுகத்தின்வேண்டுகோளையேற்றுஇராணுவஅதிகாரிஅதிரடிமுடிவு.
காரைதீவு சகா-அம்பாறை மாவட்ட கரையோர தமிழ்ப் பாடசாலைகளுக்கு ஊர்காவல்படையுடன் இராணுவத்தினரும் இணைந்து பாதுகாப்புக்கடமையிலீடுபட்டுள்ளனர்.
இதனால் மாணவரின் வரவு சடுதியாக அதிகரித்துவருகிறது. கற்றல் கற்பித்தல் செய்றபாடுகளும் சுமுகமாக இயல்புநிலைக்கு திரும்பிவருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இராணுவத்தினர் இவ்வாறு பாதுகாப்புக்கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கல்முனை காரைதீவு அக்கரைப்பற்று பகுதிகளுக்கு விஜயம் செய்த இராணுவத்தின் வெலிக்கந்தைப்பிரிவு இராணுவஉயரதிகாரி கேர்ணல் திலக் ரணசிங்கவிடம் பாடசாலைக்சமுகங்கள் ஆயுதமில்லாத ஊர்காவல் படையினரைவிட ஆயதம் தாங்கிய இராணுவத்தினர்தான் எமக்கு வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
அவர் உடனடியாக அன்றே அதிரடி நடவடிக்கையாக பாடசாலைவிடும் நேரத்தில் மோட்டார்சைக்கிளில் இராணுவத்தினரை அனுப்பிவைத்தார். மேலும் செவ்வாய்க்கிழமை முதல் ஒவ்வொரு பாடசாலைக்கும் இரு
ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரை அனுப்பிவைத்துள்ளார்.
இதற்காக இராணுவ அதிகாரிக்கு பாடசாலைச்சமுகம் நன்றிகளைத் தெரிவித்துள்ளது.