தீவிரவாத தாக்குதல் தொடர்பில் கண்டறிய விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவு நியமனம்


டந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த குழுவின் தலைவராக பிரதி சபாநாயகர் ஆனந்தகுமார சிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கமைய இந்த விசேட தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த விசேட தெரிவுக்குழுவில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான பீட்ல் மார்சல் சரத் பொன்சேகா , காவிந்த ஹேசான் ஜயவர்த்தன, பேராசிரியர் ஆசுமாரசிங்க, கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்தார்.

இதேவேளை தெரிவுக்குழுவுக்காக முதலில் எதிர்க்கட்சி உறுப்பினர்களே கோரிக்கை விடுத்தனர். எனினும் இதுவரை அவர்கள் குழுவுக்கான எந்தவொரு உறுப்பினரையும் நியமிக்கவில்லையென பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -