சிலோன் மீடியா போரத்தின் 'மண் வாசனை' நோன்பு பெருநாள் ஒன்றுகூடல் நாளை சனிக்கிழமை (08) காலை 9.30 மணிக்கு மத்தியமுகாம் நகரிலுள்ள மஃறூப் தோட்டத்தில் இடம்பெறவுள்ளதாக போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித் தெரிவித்தார்.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீட் தலைமையில் நடைபெறவுள்ள இவ்வொன்று கூடல் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், துறைசார்ந்தவர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் வயலும் வயல் சார்ந்த வாய்க்கால் குளிப்பும் கிராமத்து சமயலுடன் ஊடகவியலாளர்களின் விஷேட நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு கதம்ப நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.