த.தேசிய கூட்டமைப்பின் எம்பீக்கள் வெளியேற்றம் -இன்று 10 மணிக்கு தீர்வு என்கிறார் அம்பி பிட்டிய தேரர்


காரைதீவு வி.ரி.சகாதேவராஜா-

ல்முனையில் கடந்த 5 தினங்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை முடித்துவைக்குமுகமாக கொழும்பிலிருந்து சொப்பரில் வந்த அமைச்சர்களின் முயற்சி பலனளிக்கவில்லை.

அமைச்சர்களான மனோகணேசன் தயாகமகே மற்றும் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கொழும்பிலிருந்து நேற்று(21) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.25மணியளவில் கல்முனைக்கு வந்தனர்.

உண்ணாவிரதக்கொட்டிலில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் அமைச்சர் மனோகணேசனின் தேசியஇணைப்பாளர் வி.ஜனகன் ஆகியோர் நின்றிருந்தனர்.
அந்தப்பகுதி நிறைய மக்கள் வெள்ளம் அலைமோதியது. உணர்வுபூர்வமாக அனைவரும் காணப்பட்டனர். பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

முதலில் அமைச்சர் மனோகணேசனும் சுமந்திரன் எம்பியும் வருகைதந்து உண்ணாவிரதிகளைப்பார்த்து பேசிவிட்டு கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் எடுக்கப்பட்ட தீர்வுகள் தொடர்பாக உரையாற்றினர்.
உள்ளுராட்சிமாகாணசபைகள் வெளியிட்ட சிங்கள ஊடகஅறிக்கையை வாசிக்கமுற்பட்டபோது மக்கள் கொந்தளிக்கத்தொடங்கினர்.

முழுமையாக தரமுயர்த்தி செயற்படவைக்க 3மாதகாலஅவகாசம் தேவையென உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சு வெளியிட்ட ஊடகக்குறிப்பை அமைச்சர் மனோகணேசன் வாசிக்கும் போது உண்ணாவிரதிகளும் பொதுமக்களும் கூக்குரலிட்டு அதனை ஏற்கமறுத்தனர்.
அந்தக்கூச்சல் 3.38 அளவில் ஆரம்பமாகியது.அது அடங்க சுமார் 20நிமிடங்கள் எடுத்தன. எனினும் அதனை தொடர்ந்து அமைச்சர் மனோகணேசன் வாசித்துமுடித்தார்.
அதனிடையில் அமைச்சர் தயாகமகே அந்தஇடத்திற்குவருகைதந்தார்.

ஜனத்திரள் மத்தியில் அவர் சிங்களத்தில் பேசஆரம்பித்து அமைச்சின் ஊடகஅறிக்கை பற்றிச்சொன்னதும் மீண்டும் கூக்குரல் ஆரமிபித்தது.
நிலைமை மோசமாகிக்கொண்டுபோனது. மக்கள் 3மாதகாலத்தை எதிர்த்தனர். வெளியோ போங்கள் எனக்கத்தினர்.

வேறுவழியின்றி அமைச்சர்களான மனோகணேசன் தயாகமகே சுமந்திரன் எம்.பி. ஆகியோர் வெளியேற நேரிட்டது. பாதுகாப்பாக அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பிரதமரைக்காப்பாற்ற நீதிமன்றம் சென்ற சுமந்திரன் எம்.பி. சொந்த தமிழ்மக்களின் பிரச்சினைக்கு இதுவைர நீதிமன்றம் செல்லாதது ஏன்? என்றும் கேட்டு வெளியே போ என்று கூக்குரலிட்டனர்.

தேரர் ராஜன் அழுகை: வயர்கழற்றி எறிந்ததும் இரத்தம் பீறிட்டது.

அமைச்சர்களின் இந்தகாலஅவகாசம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. உடனடியாக தீர்வு வேண்டும். நாம் தீக்குளிப்போம் நாளை நங்சுகுடிப்போம் என்று வண.ரண்முத்துக்கல தேரரும் மாபநகரசபைஉறுப்பினர் சந்திரசேகரம் ராஜனும் ஓ என்ற அழுதுபுலம்பத் தொடங்கிவிட்டனர். அதைப்பார்த்த மக்களும் அழத்தொடங்கிவிட்டனர்.

அப்போது தேரர் தன்னில் சேலைனுக்காக கட்டியிருந்த ஊசி வயர் என்பவற்றை கழற்றிவீச இரத்தம்பீறீட்டுப்பாய்ந்தது. சூழல் உயர்ச்சிவசமாகியது. இளைஞர்கள் விரைந்து செயற்பட்டாhர்கள்.கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு தகவல் பறந்தது.. சற்றுநேரத்தில் அம்புலன்சில் வைத்தியர்குழு வந்தது. தேரர் உள்ளிட்;ட உண்ணாவிரதிகளின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு மீண்டும் சேலைன் போடப்பட்டது.

இதனிடையே கோடீஸ்வரன் எம்.பியிடமும்மக்கள் பலவாறு கேள்வியெழுப்பினர்.
இன்னமும் த.தே.கூட்டமைப்போடு இருப்பதானால் இனிமேல் இங்குவரவேண்டாம். நீங்களும் உண்ணாவிரதம் இருங்கள் என்று பலவாறு கோசமிட்டனர்.

நாளை10மணிக்கிடையில் தீர்வு: அம்பிட்டிய சுமனதேரர்!
இந்தவேளையில் மட்டு. விகாராதிபதி வண்.அம்பிட்டிய சுமனதேரர் உரையாற்றத்தொடங்கினார். மக்கள் அமைதியானார்கள்.
கொழும்பிலிருந்து வந்த பொய்யர்களின் பொய்வாக்குறுதிகளை நம்ப நம்ப நாம்தயாரில்லை.
எமது உண்ணாவிரதம் தொடரும். வெற்றிகிடைக்கும்வரை போராட்டம் தொடரும். தோல்வி நமக்கில்லை.
நாளை 10மணிக்கிடையில் இப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தருவேன்.

கல்முனைத் தமிழ் மக்களின்பிரச்சினை மட்டுமல்ல முழு கிழக்கு மாகாணத்தில் நிலவும் தமிழர்பிரச்சினைகளும்விரைவில் தீரும்.
அரசாங்கம் இந்தப்பிரச்சினைக்கு உரிய தீர்வைத்தராவிட்டால் முழு கிழக்குமாகாணமும் கொதித்தெழும். என்றார்.

இறுதியில் கோடீஸ்வரன் எம்.பி உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றினார்.
அவரர்பேசுகையில்:
என்னைத்தெரிவுசெய்த தமிழ்மக்களின் ஆசை அபிலாசைகளோடுதான் என்றும் நான்நிற்பேன். அதற்காக கட்சி தலைமைகள் என்பவற்றைப்பார்க்காமல் மக்களுக்காக போராடுவேன்.
எதிர்வரும்செவ்வாய்க்கிழமைக்கிடையில் கணக்காளரை இங்கு நியமிக்கவேண்டும். இன்றெல் நான் எனது கட்சியோடு இருப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டிவரும்.
இந்தமேடையை அரசியல்களமாக மாற்றக்கூடாதென்பதற்காக கடந்த 4நாட்களாக ஒன்றுமே பேசவில்லை.
இந்த பிரதேசசெயலகம் முழுமையாகதரமுயர்த்தப்படவேண்டும் என்பதில் நான் 100வீதம் செயற்படுவேன். ஓரிருகிழமைக்குள் காணி அதிகாரம் கிடைக்காவிடின் நான்சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிவரும் என்றார்.

உண்ணாவிரதி ராஜன் கூறுகையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கிடையில் தரமுயர்த்த நடவடிக்கைஎடுக்க வேண்டும். இன்றேல் கோடீஸ்வரன் எம்.பி. கூட்டமைப்பு என்றுகூறிக்கொண்டுவரவேண்டாம்.என்றார்.

சிவஸ்ரீ.சச்சிதாந்தசிவக்குருக்கள் கூறுகையில்: தம்பி கோடிஸ்வரன் எம்.பி. விரும்பினால் எம்முடன் வாருங்கள் என்றார்.
உறுப்பினர்அ.விஜயரெத்தினம் கூறுகையில்: தரமுயர்த்தப்படாவிட்டால்கூட்டமைப்பு அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்குவது மட்டுமல்லாமல் 16எம்பிக்களும்இராஜினாமாச்செய்யவேண்டும்என்றார்.
இறுதியில் அம்புலன்ஸ்வந்து சிகிச்சைஅளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -