அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பாகவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.
துடுப்பாடம் மற்றும் பந்து வீச்சு அனைத்திலும் வலுவாக உள்ள இந்திய அணி நடப்பு உலக கோப்பையில் தோல்வியே சந்திக்காத அணிகளில் ஒன்றாகும்.
தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியதுடன், நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. இங்கிலாந்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 397 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து மிக மோசமாக தோற்றது.
இந்தியா–ஆப்கானிஸ்தான் அணிகள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இதுவரை 2 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டம் சமனில் முடிந்தது.
உலக கோப்பையில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் அது உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவின் 50 ஆவது வெற்றியாக அமையும்.