13 வது திருத்தம் தொடர்பாக மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சுமந்திரன்


13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவுள்ளது.
2 ஆவது முறையாகவும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை வரவுள்ளார். அவரது விஜயத்தின் ஓர் அங்கமாக, கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனும் மதியம் 2 மணியளவில் கலந்துரையாடலில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் பேசப்படவுள்ள விடயம் குறித்து எமது ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன், 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்தியாவுக்கு உறுதியளித்திருந்தது.
எனினும், 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவித்த சுமந்திரன் 13 வது திருத்தத்தை அறிமுகப்படுத்திய இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுக்கும் பொறுப்பு, தமிழர்களுக்கு மட்டுமன்றி இந்தியாவிற்கும் உள்ளதாக கூறியுள்ளார்.
இதேவேளை ஒரு புதிய அரசியலமைப்பைப் குறித்து பேசப்பட்டாலும் அதுவும் தற்போது இழுபறிநிலையில் இருப்பதால் இந்தவிடயம் தொடர்பாகவும் நாம் இந்திய பிரதருடன் கலந்துரையாடுவோம் என்றும் சுமந்திரன் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக குறித்த விஜயத்திற்கு முன்னர் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
அத்தோடு ஏப்ரல் 21 ம் திகதி பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து இலங்கையின் அரசாங்கத்துடனும் மக்களுடனும் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த விஜயம் அமைகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அந்தவகையில் இன்று முற்பகல் 11 மணியளவில் இலங்கை வந்திறங்கும் பிரதமர் மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் பின்னர் இரா.சம்பந்தனையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -