2020 ஆம் ஆண்டிலும் இந்த நாட்டின் ஜனாதிபதி யார் என்பதை ஜாதிக ஹெல உறுமய தீர்மானிக்கும்


ஐ. ஏ. காதிர் கான்-
டந்த 2005 ஆம் ஆண்டும், 2010 ஆம் ஆண்டும், 2015 ஆம் ஆண்டும் இந்த

நாட்டில் ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானித்தது ஜாதிக ஹெல உறுமய கட்சியாகும்.
அதுபோல, 2020 ஆம் ஆண்டிலும் தாமே அதனைத் தீர்மானிப்பதாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் ஜனாதிபதியின் கொள்கைத் திட்டம் என்ன என்பதை நாமே தீர்மானித்தோம் எனவும், இம்முறையும் தாமே அதனைத் தீர்மானிப்போம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தை ஒத்திவைத்து வருவது, நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -