கொட்டகலை அருள்மிகு ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தானத்தின் ஆலய பரிபாலன சபையினர் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களை இன்று அமைச்சில் சந்தித்து ஆலயத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் முத்தையா ராம் மற்றும் அமைச்சரின் கொட்டகலை பிரதேச அமைப்பாளர்களான சிவகுமார் செந்தூரன் ஆகியோருடன் ஆலய பரிபாலனசபை தலைவர் வடிவேல் உள்ளிட்ட குழுவினர் கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களை சந்தித்து ஆலய புனரமைப்பு பணிகளுக்கு உதவி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அமைச்சின் ஒதுக்கீட்டிலிருந்து 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க இணக்கம் தெரிவித்ததோடு மேலதிக நிதி உதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்து விவகார அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களை சந்திப்பதற்கு ஆலய பரிபாலன சபையினர் ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.
அமைச்சரை சந்தித்த ஆலய பரிபாலன சபையினர் அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்கள் மலையக மக்களுக்கு என ஆற்றிவரும் சேவைகளுக்கு நன்றி தெரிவித்ததோடு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.