இதை அடுத்து இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா இருவரும் இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்கம் தந்து முதல் விக்கெட்டுக்கு 92 ஓட்டங்கள் குவித்தனர்.
அடுத்தடுத்து வந்த இலங்கை துடுப்பாட்டக்காரர்கள் ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
இலங்கை அணி 33 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது, இதனால் போட்டி 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
மீண்டும் களம் இறங்கிய இலங்கை அணி 201 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக குசல் பெரேரா 78 ஓட்டங்களும், திமுத் கருணாரத்ன 30 ஓட்டங்களும் குவித்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நபி 4 விக்கெட்டும், தவ்லத் ஜட்ரன் மற்றும் ரஷித் கான் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
இதை அடுத்து டக்வொர்த் லெவிஸ் விதிப்படி, ஆப்கானிஸ்தான் அணி 41 ஓவர்களில் 187 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் ஆப்கானிஸ்தான் அணி 187 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.
இறுதியில் ஆப்கான் அணி 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் பிரதீப் (4) விக்கெட்களை வீழ்த்தினார். மலிங்க (3) விக்கெட்டும், இசுரு உதனா, திசர பெரேரா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.