கல்முனையில் 3வது நாளாக உண்ணாவிரதம்: திவீரமாகிறது!

 
படுத்தபடுக்கையில் உண்ணாவிரதிகளின் நிலை மோசமாகிறது.:மக்கள் பலத்த ஆதரவு: கோடீஸ்வரன் கருணாஅம்மான் வியாழேந்திரனும்வருகை!
காரைதீவு நிருபர் சகா-ல்முனை வடக்குபிரதேச செயலக தரமுயர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திஙகளன்று ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் 19) புதன்கிழமை தொடர்ந்து இடம்பெற்றது.

கல்முனை வடக்கு பிரதேசசெயலக முன்றலில் இவ் உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரவுபகலாக இடம்பெற்றுவரும்இப்போராட்டம் மேலும் வலுப்பெற்றுவருகிறது.

கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கல்முனை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக்குருக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் அ.விஜயரெத்தினம் அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவரும் தொழிலதிபருமான கே.லிங்கேஸ்வரனும் ஆகியோர் உண்ணாவிரதத்தில் குதித்தனர்.
உண்ணாவிரதிகளின் உடல்நி மிக மோசமாகிகவருகிறது. மருத்துவர்கள் இடையிடையே வந்து பரிசோதனை செய்கின்றனர். உண்ணாவிரதிகள் வைத்தியசாலைக்குச்செல்ல மறுக்கின்றனர். படுத்தபடுக்கையில் கிடக்கிறார்கள்.
மக்களின் ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது.
(19) புதன்கிழமை முன்னாள் பிரதியமைச்சர்' வினாயகமூர்த்திமுரளிதரன் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் திருக்கோவில் பிரதேசசபைத்தவிசாளர் வி.இ.கமலராஜன் காரைதீவுபிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோரும் விஜயம்செய்திருந்தனர்.
பிரதமரிடமிருந்து இன்று ஒரு செய்திகடைக்கவிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் கலந்துகொண்டார்.
நேற்றுமுன்தினம் மாலைதமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் செயலாளர் பூ.பிரசாந்தன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வெள்ளிமலை கிழக்கு தமிழர் ஒன்றியம் முன்னாள மாகாணசபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன் கு.இனியபாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூடவே அம்பாறை மாவட்ட சர்வசமயசம்மேளனத்தின் உபதலைவர் போதகர் எ.கிருபைராஜா சுழற்சிமுறையிலான உண்ணாவிரத்தில் குதித்துள்ளார்.மூத்த த.அ.கட்சித்தலைவர் கு.ஏகாம்பரமும் இணைந்துள்ளார்.

உண்ணாவிரதிகள் களைப்படைந்து பேசுவதற்கு சிரமப்படுபவர்களாகக்காணப்படுகின்றனர்.
மேலும் கல்முனை பொதுப்பிரமுகர்கள் இளைஞர்கள் நலன்விரும்பிகள் உணர்வாளர்கள் எனப்பலரும் ஒன்றுகூடத்தொடங்கியுள்ளனர். பொலிஜ்பாதுகர்பும் வழங்கப்பட்டுள்ளது.

திங்களன்று ஒரு கொட்டிலில் 4கதிரைகளில் 4பேர் ஆரம்பித்த இவ்வவுண்ணாவிரதப்போராட்டம் நேற்று 6கொட்டில்களாகியது. மட்டுமல்லாமல் கட்டில்கள் மெத்தைகள் மின்விசிறிகள் எனப் பரவலாக விசாலாமாகிவருகிறது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -