ரெலிகொம் கம்பங்களிலுள்ள கேபிள் ரிவி வயர்கள் துண்டிப்பு! இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டு:மக்கள் 5நாள்ரிவியின்றி கவலை!

காரைதீவு நிருபர் சகா-
ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்திற்குரிய கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த கேபிள் ரிவிக்கான வயர்களை ரெலிகொம் நிறுவனத்தினர் வெட்டித்துண்டாடி அகற்றியுள்ளனர்.
இதனால் அப்பிராந்தியத்திலுள்ள சுமார் 5ஆயிரம் கேபிள் ரிவி பாவனையாளர்கள் கடந்த 5நாட்களாக எவ்வித நிகழ்ச்சியையும் பார்க்கமுடியாமல் மிகுந்த கவலையிலுள்ளனர்.

இச்சம்பவம் கல்முனைப்பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ரெலிகொம் நிறுவனத்தினரும் கேபிள் ரிவி நிறுவனத்தினரும் கல்முனைப் பொலிசில் பரஸ்பரம் முறையிட்டுள்ளனர்.

அதன்படி கல்லாறு தொடக்கம் நிந்தவூர் வரையுள்ள பிராந்தியத்தில் வெட்டித்துண்டாடிய வயர்களையும் ஏனைய உபகரணங்களையும் கல்முனை ரெலிகொம் கல்முனைப்பொலிசில் ஒப்படைக்கவுள்ளது.
இச்சம்பவத்தால் கேபிள் ரிவி நிறுவனத்திற்கு 51லட்சருபா சேதமேற்பட்டுள்ளதாக கேபிள்நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளது.
இது தொடர்பில் கல்முனைப்பிராந்திய ரெலிகொம் உயரதிகாரியிடம் கேட்டபோது:
எமது மேலிடத்து உத்தரவுக்கமைவாக நாம் எமது ரெலிகொம் கம்பங்களில் அதிகாரமளிக்கப்படாமல் அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள வயர்களை நாம் அரசாங்கத்தின் இரு மணிநேர 'எல்லையற்ற நீங்கள்' எனும் திட்டத்தின்கீழ் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளோம்.
இந்த முறையற்ற வயர்களை அகற்றுமாறு நாம் ஏலவே குறித்த கேபிள் நிறுவனத்திடம் கூறியிருந்தோம். தவிர கல்முனைப் பொலிசிலும் இருதடவைகள் முறையிட்டிருந்தோம்.
அவர்கள் ஏப்ரல் 10ஆம் திகதிக்குள் அகற்றுவதாகக்கூறினார்கள். ஆனால் இன்னும் பூரணமாக அகற்றவில்லை.எனவேதான் அவற்றை அகற்றினோம். அவற்றை பொலிசில் பாரம்கொடுப்போம் என்றார்.

இதுதொடர்பில் கேபிள் ரிவி ரைமாஸ் நிறுவனத்தின் கிழக்குப்பிராந்திய முகாமையாளர் பாலசுந்தரம் அலெக்ஸ்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
கடந்த 5வருடங்களாக அவர்களது கம்பங்களில்தான் நாம் எமது வயர்களைக்கட்டி பொதுமக்களுக்கு 60சானல்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கிவருகின்றோம். கல்முனைப்பிராந்தியத்தில் சுமார் 5ஆயிரம் வாடிக்கையாளர்களுள்ளனர். 100கிலோமீற்றர் தூரத்திற்கு கேபிள்கள் பொருத்தியுள்ளோம். அதில் 35கிலேமீற்றர் தூரத்திற்கான கேபிள்களை அறுத்து வெட்டி துண்டாடி அகற்றியுள்ளனர்.
உண்மையில் நாம் கட்டியது பிழைஎன்றால் 5வருடங்களுக்கு முன்பே அகற்றியிருக்கலாம். அவர்களால் கூறப்பட்ட ஓரிரு நாட்களுள் அவற்றை அகற்றமுடியுமா?
மற்றது எம்மிடம் கடந்தவெள்ளிக்கிழமை எதுவுமே கூறாமல் திடிரென எமது வயர்களை துண்டுதுண்டாக துண்டாடியுள்ளனர். பொலிசில்லாமல் எமது வயர்களை துண்டாட இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யாhர்? இதனால் சுமார் 51லட்சருபா எமக்கு சேதமேற்பட்டுள்ளது. நாம் கல்முனைப்பொலிசில் முறைப்பாடு செய்துள்ளோம்.
எனினும் வாடிக்ககையாளர் நலன்கருதி நாம் இதுவைர 300 கம்பங்கள் நட்டு அவற்றில் எமது கேபிள்களை இணைத்து கல்லாறு பெரியநீலாவணை மருதமுனை கல்முனை போன்ற இடங்களில் எமது சேவையை வழமைக்குத்திரும்பியுள்ளோம்.

ஏனைய இடங்களிலும் அதனை வழமைக்குக்கொண்டுவர குறைந்தது 6மாதகால அவகாசமாவது தரவேண்டும் மனிதாபிமான அடிப்படையில் இதனை அவர்கள் அணுகியிருக்கவேண்டும்.
மேலிடத்து உத்தரவு என்றால் கல்முனைக்கு மட்டுமதானா? மட்டக்களப்பு உள்ளிட்ட சகல மாவட்டங்களிலும் வழமைபோன்று அவர்களின் கம்பங்களில்தான் எமது கேபிள்கள் கட்டப்பட்டு சேவை தொடர்கிறது.இது திட்டமிட்டு நடப்பதுபோல் தெரிகிறது.
எமது 51லட்சருபாவுக்குரிய வயர்கள் உபகரணங்களை எவ்வித சேதாரமுமில்லாமல் தரவேண்டும்.இன்றேல் நாம் சட்டநடவடிக்கைக்கு செல்லநேரிடும் என்றார்.
இதேவேளை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் கூறுகையில் இருதரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து மக்களுக்கான சேவையை வழங்கமுன்வரவேண்டும் என்றார்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -