தோட்டப்பாடசாலைகளிலிருந்து 500 மாணவர்களை ஹட்டன் கல்விவலயத்திலிருந்து அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த மூன்றாண்டு காலமாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம.; இதில் தேசிய மட்டத்தில் நடக்கின்ற பரீட்சைகளில் மாணவர்கள் அனைவரும் சித்தி பெற வைக்கவேண்டும். என்பதற்காக நாங்கள் ஒவ்வொரு பாடசாலைகளினதும் பெறுபேறுகளை அலசி ஆராய்ந்து அதனை வலயத்திலுள்ள ஒவ்வவொரு பாடசாலை அதிபர்களுக்கும் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள்,வளவாளர்கள் என அனைவருக்கும் வழங்கியுள்ளோம்;.அதனை அடிப்படையாக கொண்டு பாடசாலைகளை தரப்படுத்தி புலமை பரிசில் பரீட்சையில் அனைத்து மாணவர்களும் 100 மேல் புள்ளிகளை பெற செய்வதற்கு வழி காட்டியுள்ளோம். அதனை தொடர்ந்து க.பொ.சாதாரண தரத்தில் அனைத்து மாணவர்களும் சித்தியடைவதற்காக வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம.; எனவே எதிர் காலத்தில் 500 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவோம் என ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
ஹட்டன் கல்வி வலயத்தில் நாக்கு கோட்டங்களிலும் கடந்த 2018 ம் ஆண்டு தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்த பாடசாலையின் ஆசிரியர்களையும் அதிபர்களையும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஹட்டன் லக்ஸ்மி மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கரு;த்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று பாடசாலைகளை பொறுத்த வரையில் பல பாடசாலைகளில் அதிகமான ஆசிரியர்கள் வளங்கள் காணப்படுகி;ன்றன ஆனால் அந்த பாடசாலைகளில் பெறுபேறுகள் வருவது கிடையாது. அதே நேரம் ஆசிரியர்கள் கலைமானி,முதுமானி,கலாநிதி என பட்டம் பெற்றிருக்கிறர்கள் அவர்கள் பட்டம் பெறுவதற்கு 100 புள்ளிகள் அல்லது எண்பது புள்ளிகள் எடுக்க முடியும் என்றால் ஏன் மாணவர்களை 40 புள்ளிகள் எடுக்க வைக்க முடியாது?அப்படியான ஆசிரியர்கள் அல்லது அதிபர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் எமக்கு அவசியமில்லை நான் அவர்களை ஒரு பக்கம். வைத்து விட்டு முடிந்தவர்களுக்கு அந்த இடத்தினை வழங்குவோம.; இன்று தரம் இல்லாத அதிபர்கள் ஆசிரியர்கள் எத்தனை மாணவர்களை சித்திபெறச் செய்துள்ளார்கள.; அவர்களை நாங்கள் பாராட்டுகின்றோம.; அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.இதே நேரம் பல பாடசாலைகள் தாங்கள் பெற்ற வெற்றிகளை தக்க வைத்துக்கொள்ளும் அதே வேலை தொடர்ந்தும் வெற்றியை நோக்கியே பயணிக்க வேண்டும் தாங்கள் பெற்றுக்கொண்ட இடத்தினை விட்டுக்கொடுக்காது பார்த்துக்கொள்ள வேண்டியது அனைத்து அதிபர்களினதும் கைகளிலேயே தங்கியுள்ளது என அவர் மேலும் தெரிவி;த்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலைகலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நகழ்வுக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள்,வளவாளர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.