அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட 75 என் சி டின்களுடன் ஒருவர் கைது




நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா-
போதை பொருள் அடங்கிய 75 என் சி டின்களுடன் ஒருவர் கைது
பொகவந்தலாவ கிலானி தோட்டபகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தடைைசெய்யப்பட்டுள்ள 75 என்.சி (புகையிலைதூல்)டின்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
இந்த கைது சம்பவம் 10.06.2019 திங்கள் கிழமை இரவு இடம்பெறுள்ளது

ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன அவர்களின் போதை பொருளை ஒழிப்போம் எனும் வேலைத்திட்டத்தின் கிழ் முன்னெடுக்கபட்ட சுற்றிவலைப்பின் போதே குறித்த என்.சி டின்களும் மீட்கப்படதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த புகையிலை தூள் அடைக்கபட்ட என்.சி டின் ஒன்று தோட்டமக்களுக்கு 250 ரூபாவிற்கு விற்பனை செய்து வருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

கைது செய்யபட்ட சந்தேக நபர் 11.06.2019 செவ்வாய்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்தபட உள்ளதாக
பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -