மிதுன் கான்-
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் வேண்டுகோளுக்கு இணங்க பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இப்பலோகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கட்டியாவ யாய 7 வீதி இன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.இதன் போது குறித்த பிரதேசத்தில் சேதமடைந்த நிலையில் காணப்படும் மேலும் சில வீதிகளை பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் நேரில் சென்று பார்வையிட்டதோடு அவற்றையும் புனர் நிர்மாணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
குறித்த நிகழ்வில் இப்பொலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம், ஊர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் குறித்த பிரதேச மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.