அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல்-இராணுவ விவகாரங்களுக்கான உதவிசெயலாளர் கண்ணிவெடி அகற்றலுக்கான 970 மில்லியன் ரூபா பற்றி சுட்டிக்காட்டு

பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடுவதற்கும் அமெரிக்க நிதியுதவியின் கீழான கண்ணிவெடியகற்றல் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல்-இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஆர். கிளார்க் கூப்பர் ஜூன் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்தார்.

கண்ணிவெடியகற்றல் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கும் திட்டத்தின் பயனாளிகளை சந்திப்பதற்காகவும் உதவிச் செயலாளர் கூப்பர் கிழக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டார்.

இந்தத் திட்டங்களானது, இலங்கையின் கண்ணிவெடி அகற்றல் முயற்சிகளின் நிமித்தம் 2018 ஆம் நிதியாண்டில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் உதவியாக வழங்கப்பட்ட சுமார் 970 மில்லியன் இலங்கை ரூபாவின் (5.5 மில்லியன் அமெரிக்க டொலர்) அங்கமாகும்
'2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடி தாக்கமற்ற நாடாக உருவாகும் இலங்கையின் இலக்கை அடைவதில் இலங்கையுடன் பங்காண்மையுடன் செயற்படுவதில் அமெரிக்கா பெருமையடைகிறது.

கண்ணிவெடி அகற்றலானது அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்புக்கு அமெரிக்க-இலங்கை பாதுகாப்பு பங்காண்மை எவ்வாறு பங்களிப்பு செய்கிறது என்பதன் ஒரு அம் சம் மட்டுமே,' என்று
உதவிச் செயலாளர் கூப்பர் தெரிவித்தார். 'பகிரப்பட்ட நலன்களை மேம் படுத்துவதற்கு இறையாண்மையுடைய நாடுகள் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ட்ரம்பின் இந்து-பசுபிக் உபாயம் கோடிட்டுக்காட்டுகிறது. இலங்கையின் இறையாண்மை மற்றும்
சுயாதினத்தை நாம் மதிப்பதுடன், எமது இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்வதற்கும் எதிர்பார்க்கிறோம்,'என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் வெடிப்பொருட்கள் ஆபத்துக்களை அகற்றுவதற்கு 2002 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா 9.5 பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் (56 மில்லியன் அமெரிக்க டொலர்) அதிகமான தொகையை வழங்கியுள்ளது. அமெரிக்க நிதியுதவியானது கண்ணிவெடி ஆபத்துக்களால்
பாதிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும்
அகற்றல்முயற்சிகளை
மேம்படுத்துவதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் தற்போது 650 இற்கும் மேற்பட்ட தொழில்வாய்ப்புகளுக்கும் உதவிகளை வழங்கி வருகிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -