கல்முனை மண்ணை சிதைக்க அனுமதிக்க முடியாது – அக்கரைப்பற்று ACMC பொறுப்பாளர் வாஸீத்

ஏ.எல்.றமீஸ்-
லங்கை முஸ்லிம்களின் இதயமாக வர்ணிக்கப்படும் கல்முனையை மையப்படுத்தி பேரினவாதிகளின் இனரீதியான பிரதேச செயலக கோரிக்கையானது நாட்டின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் விடப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பொறுப்பாளர் தொழிலதிபர் ஏ.எஸ்.ஏ. வாஸீத் தெரிவித்தார்.

கல்முனை சந்தை சதுக்கத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவரீதியில், நிலத்தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்க எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடைசெய்யக்கோரி கல்முனை மக்கள் மேற்கொள்ளும் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

வாஸீத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

முஸ்லிம் சமூகம் தமிழ் சமூகத்தோடு மிக நீண்டகாலமாக நல்லினக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதே மண்ணைச்சேர்ந்த மசுர் மௌலானா மற்றும் டாக்கடர் உதுமாலெப்பை போன்றோர் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டு தமிழர்களின் உரிமைசார் பிரச்சினைகளுக்கு முன்னின்று குரல் கொடுத்தவர்கள்.அத்தோடு கல்முனைப் பிரதேசம் என்பது தமிழ் முஸ்லிம் உறவுகளால் கட்டியெழுப்பப்பட்ட புனித பூமியாகும்.

இப்படியான நிலையில் கல்முனை பிரதேச தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமையையும் நிம்மதியையும் சீர்குலைப்பதற்கு இம் மாவட்டத்திற்கு வெளியிலுள்ள சில இனவாதிகள் கங்கனம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களின் இனவாத கருத்துக்களுக்கு இரண்டு சமூகங்களும் பலிக்கிடாவாகாமல் பாதுகாத்துக் கொள்வது எமது வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் கடமையாகும் என வாஸீத் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -