அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-
இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்கினார்.
அவர் வழங்கிய சாட்சியம் வருமாறு,
கேள்வி : ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தினர். இக்காலப் பகுதியில் விசாரணை நடவடிக்கைகளுக்கு எவரேனும் அழுத்தங்களை கொடுத்தார்களா?
பதில் : ஏப்ரல் 21ஆம் திகதி சம்பவம் இடம்பெற்ற பின்னர் இராணுவத் தளபதி என்ற வகையில் இராணுவத்தினரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தினேன். எனக்குரிய அதிகாரங்களுக்கமைய தேடுதல்கள், விசாரணைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.
ஏப்ரல் 26ஆம் திகதி இசான் அஹமட் என்பவர் தெஹிவளை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது எனக்கு அமைச்சர் ரிஷாட் பதியூதின் தொலைபேசி அழைப்பை எடுத்தார். எனது தொலைபேசி இலகத்தை சகலரும் அறிவார்கள். அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோரும் கதைப்பார்கள். இதன்படி அவரும் கதைத்துள்ளார்.
இதன்போது அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு அவரை கைதுசெய்தீர்களா? எனக் கேட்டார். அது பற்றி எனக்கு தெரியாது. நான் ஆராய்ந்து கூறுவதாக கூறினேன். பின்னர் இராண்டாவது தடவையாகவும் கேட்ட போது இன்னும் தேடுவதாக கூறியிருந்தேன். இராணுவப் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிடம் குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளரா? எனக் கேட்டேன். பின்னர் கேட்ட போது அவர் கைது செய்யப்பட்டிருந்தமை தொடர்பாக உறுதியாகியிருந்தது.
அப்போது இது பற்றி இன்னும் ஒன்றரை வருடங்களின் பின்னரே இனி தொலைபேசி அழைப்பை எடுக்க வேண்டுமென கூறியிருந்தேன். பயங்கரவாதத் தடுப்பு பிரிவில் அவரை ஒன்றரை வருடங்களுக்கும் விசாரணைக்காக வைத்திருக்க முடியும். என்ற காரணத்திற்காகவே நான் அவ்வாறு கூறியிருந்தேன். எவ்வாறாயினும் அவர் எனக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை. கோரிக்கையையே செய்திருந்தார். தனது அமைச்சில் பணியாற்றும் உயர் அதிகாரியின் மகன் என்பதனால் அது தொடர்பாக ஆராய்ந்து பார்க்குமாறே கூறியிருந்தார்
கேள்வி (ரவி கருணாநாயக்க) : வேறு அமைச்சர்கள் யாரேனும் அழுத்தம் கொடுக்கவில்லையா?
பதில் : இல்லை, விசாரணைகள் இடம்பெற்ற நேரங்களில் சிலரை பற்றி தேடிப்பார்ப்போம். ஆனால், எந்த தரப்பில் இருந்தும் அழுத்தம் வரவில்லை. குறிப்பாக இந்த அமைச்சர் (ரிஷாட் பதியுதீன்) எக்காரணம் கொண்டும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் நீல் ரஞ்சித் அசோக்க பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் கூறியதாவது,
கேள்வி:- கைத்தொழில் அபிவிருத்தி சபையினூடாக பயங்கரவாதிகளுக்கு கழிவு இரும்புகள் வழங்கப்பட்டது தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது இது உண்மையா?
பதில்:- குற்றஞ்சாட்டப்படும் கொலேசஸ் கம்பனி 2011 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த கம்பனி அண்மையில் தமது பணிப்பாளர் சபையை மாற்றியுள்ளது. கழிவு இரும்பு வகைகளை மீள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இது பிரதான நிறுவனமாகும். இவர்களிடமுள்ள இயந்திரங்களினூடாக 11 ஆயிரம் கிலோ கழிவு இரும்புகளை உருக்க முடியும். அதிகம் கழிவு இரும்புகளை கொண்டு உற்பத்தி செய்வதால் இந்த நிறுவனத்திற்கு கூடுதல் கழிவு இரும்புகள் வழங்கப்படுகின்றது.குண்டுத் தாக்குதல் சம்வத்தின் பின்னர் மேலதிக செயலாளர் அடங்கலான மூவர் கொண்ட குழுவினூடாக விசாரணை நடத்தினோம். இந்த கம்பனியின் வருடாந்த தேவை 1200 மெற்றிக் தொன்னாக உள்ளது. பாதுகாப்பு அமைச்சினூடாக ஒதுக்கும் வெற்று ரவைகள் கோரப்பட்டிருந்தது. அவை சேதமாக்கப்பட்டு வழங்கப்பட்டன. இரு தடவைகளே அவை கிடைத்தன.
கேள்வி:- குறித்த கம்பனிக்கு கழிவு இரும்புகளை வழங்குமாறு யாராவது கோரினார்களா?
பதில்:- இல்லை.கிராம சேவகர், பிரதேச செயலாளர், மற்றும் மாவட்ட செயலாளர் நியமிக்கும் குழு என்பவற்றின் அனுமதியின் பின்னரே கழிவு இரும்பு வழங்கப்படும்.
கேள்வி:- சதொச வாகனங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது? இதன் உண்மைத்தன்மை என்ன?
பதில்:- இது தொடர்பில் மேலதிக செயலாளர் ஊடாக விசாரணை நடத்தினேன். அந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.
கேள்வி:- இது தொடர்பில் அவமதிப்பு வழக்கு தொடர்பாக முடியாதா?
பதில்:- அது யதார்த்தமாகாது. என்னை அவமதித்து செய்தி வெளியிட்டாலும் மௌனமாக இருப்பேன். அமைச்சருக்கு எதிராக தினமும் செய்திகள் வெளியாகும்.
கேள்வி:- இப்ராஹீமின் நிறுவனத்திற்கு அதிக வெற்று ரவைகள் அதிகம் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.அவ்வாறு வழங்குமாறு அமைச்சரோ வேறு யாராவதோ அழுத்தம் வழங்கியுள்ளனரா?
பதில்: இல்லை. சிலர் குறித்த நிறுவனத்திற்கு வழங்குமாறு பரிந்துரை வழங்கி கடிதம் அனுப்பியுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இருந்தும் 500 மெற்றிக் தொன் வழங்குமாறு கடிதம் வந்தது.ஆனால் எம்மிடம் போதியளவு மூலப்பொருட்கள் கிடையாது. சாந்த பண்டார எம்.பியும் அவ்வாறு கடிதம் வழங்கியுள்ளார். கொலேசஸ் கம்பனிக்கு வழங்குமாறு கோரப்பட்டாலும் எந்த அழுத்தமும் வழங்கப்படவில்லை.
கேள்வி:- சதொச நிறுவனத்தில் இரகசிய அறையிருப்பதாக சில ஊழியர்கள் ஊடகங்களுக்கு கூறியிருந்தனர்.
பதில்:- சதொச நிறுவன 9 ஆம் மாடியில் உள்ள அலுவலகத்தை தான் இவ்வாறு கூறியுள்ளனர். அதனை யுனிடோ எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி:- இப்ராஹீம் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு என கூறப்படுகிறது இதன் உண்மை தன்மை என்ன?
பதில்:- அவர் அமைச்சருடன் பேச்சு நடத்தியதாக ஊடகங்கள் கூறின. அவர் வறிய நிலையில் இருந்து உயர் நிலைக்கு வந்தவர். அவருடன் நான் தொடர்பு பட்டு செயற்பட்டது கிடையாது. எம்முடன் தொடர்புபட்டுள்ள வர்த்தகர்களில் முஸ்லிம்கள் அதிகம். அதை தவிர எனக்கு எதுவும் தனிப்பட்ட முறையில் தெரியாது.
கேள்வி:- பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உங்கள் அமைச்சு உதவியுள்ளதா?
பதில்:- இல்லை.அவ்வாறு தெரிந்தால் உதவ மாட்டோம். இப்ராஹீம் விடயத்தில் தாக்குதலின் பின்னர் தான் அவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுவந்தது. நான் இன்னும் அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தொடர்பு இருப்பதாக நம்பவில்லை. கைத்தொழில் அபிவிருத்தி சபை கோரிய பின்னர் இரு தடவைகள் பாதுகாப்பு சபை பழைய வெற்று ரவைகள் வழங்கின. 2017 இல் தான் முதன் முறை இராணுவம் வழங்கியுள்ளது.
கேள்வி:- இன்சாப் இப்ராஹீம் அமைச்சு வாகனங்களை பயன்படுத்தியுள்ளாரா?
பதில்:- இல்லை. அவர் பொருளாதார ரீதியில் பலவீனமானவரல்ல.அவருக்கு எமது வாகனங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
கேள்வி:- பிரதேச சபை உறுப்பினர் அப்துல் ஹனூன் என்பவர் அமைச்சின் இணைப்புச் செயலாளராக செயற்பட்டுள்ளாரா?
பதில்: இல்லை.
கேள்வி: –அமைச்சின் ஆலோசகராக மௌலவி ஒருவர் இருந்தாரா?
பதில்:- இல்லை. நான் செயலாளராக வந்த பின்னர் அவ்வாறு யாரும் இருக்கவில்லை.
கேள்வி:- தாக்குதலுக்கு பயன்படுத்திய மூலப்பொருட்களுக்கும் கைத்தொழில் அபிவிருத்தி சபை வழங்கிய மூலப்பொருட்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று தெரியுமா?
பதில்:- பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இது தொடர்பில் எழுத்து மூலம் வினவியுள்ளோம்.இது வரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
கேள்வி:- இப்ராஹிமுக்கு உதவுமாறு அமைச்சர் ரிசாத் கோரியுள்ளாரா?
பதில்:- ஒருபோதும் இல்லை.
கேள்வி:- கொலன்னாவ கைத்தொழிற்சாலை சுற்றிவளைப்பை எல்.ரீ.ரீ.ஈ ஆயுத களஞ்சியத்தை சுற்றிவளைத்தது போன்று ஊடகங்கள் காண்பித்தன.அதுபற்றி
பதில்:- அங்கு வேறு என்ன நடந்துள்ளது என்றுதெரியாது. நாம் வழங்கிய மூலப்பொருட்களை பயன்படுத்தி வெடிபொருட்கள் உருவாக்கப்பட்டதா என்பதை இராணுவம் இதுவரை உறுதி செய்யவில்லை.
கேள்வி:- சதொச வாகனங்களில் இருக்கும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை கொண்டு அவை பயங்கரவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தியுள்ளது உறுதியாகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
பதில்:- அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் விசாரணை நடத்தினோம். அவை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை. குறித்த தினம் குறித்த இடத்திற்கு அவை பயணம் செய்யவில்லை.
கேள்வி: –அமைச்சர் ரிசாத் உத்தியோகபூர்வ வாகனத்தை மீள கையளித்துள்ளாரா?
பதில்:- ஆம் இரண்டு தடவை அமைச்சு பதவி வகிக்காத நிலையில் மறுநாளே அவற்றை கையளித்தார். இம்முறையும் அவ்வாறே வழங்கினார்.
தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று (26) சாட்சியமளிக்க தயாரான போது விசாரணைக்குழுவின் அறிவிப்புக்கு இணங்க நாளை (28) 02 மணிக்கு தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க கோரப்பட்டது.
முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தெரிவுக்குழு விசாரணைகள் மூலம் பொய்ப்பிப்பு.