இன்றைய காலகட்டத்தில் நாடு பதட்டமாக இருக்கும் சூழ்நிலையில் சிறுபான்மை அரச ஊழியர்கள் மீது திணிக்கப்பட்ட அலுவலக ஆடை தொடர்பான சுற்றுநிருபம் தொடர்பில் தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவிப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்டுள்ளதாவது இனப்புரிந்துணர்வை வேண்டி நிற்கும் இக்கால கட்டத்தில் அவற்றை சிதைக்கும் விதமாக அரசாங்கம் செயற்பட முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உரிய அமைச்சருடன் தான் உரையாடியுள்ளதுடன் இவ்வாறான விடயங்கள எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்கு ஜனாதிபதியிடம் இவ்விடயம் குறித்து தான் பேசவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகப்பிரிவு-