ஓட்டமாவடியைச் சேர்ந்த முகம்மது முஸ்தபா முர்ஷிதீன் இன்று (19) உதவி சுங்க அத்தியட்சகராக நிதி அமைச்சில் வைத்து அமைச்சர் மங்கள சமரவீரவிடம் நியமனத்தை பெற்றுக் கொண்டார்.
இவர் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை கல்வி கற்று ஶ்ரீஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் 2017 ம் ஆண்டு B.Sc Public Mgt (Special) பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
அத்தோடு இவர் இலங்கைய பட்டயக் கணக்காளர் கற்கை நெறியில் (Chartered Accountancy) இறுதி நிலை (Final Stage) மாணவருமாவார்.
குறித்த உதவி சுங்க அத்தியட்சகர் பரீட்சையில் தேசிய ரீதியாக 12,000 பேர் தோற்றி
350 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டு
134 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் 10வது நிலையினை பெற்றுக் கொண்ட முர்ஷிதீன் இன்று உதவி சுங்க அத்தியட்சகர் நியமனத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.