முஸ்லிம்களின் நல்லிணக்க வெளிப்பாட்டுக்குரிய பரிசே- புதிய சுற்றுநிருபம்.


முகம்மத் இக்பால் சாய்ந்தமருது-

முஸ்லிம்களின் நல்லிணக்க வெளிப்பாட்டுக்கு பரிசாகவே புதிய சுற்றுநிருபம். இதற்கு பொறுப்பு நீலக்கட்சியா ? பச்சைக் கட்சியா ?

பொது நிர்வாக அமைச்சினால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான ஆடைகள் அணிவது தொடர்பான குழப்பமானதொரு சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் தெரியாமல் குறித்த அமைச்சினால் தன்னிச்சையாக இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டதென்று நம்பினால், எங்களைப்போலதொரு முட்டாள் யாருமிருக்க முடியாது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரைக்கும் முஸ்லிம் மக்களுக்கெதிரான சிங்கள இனவாதிகளின் அடக்குமுறைகள் மற்றும் இனவாத செயல்பாடுகள் ஒவ்வொரு ரூபத்திலும் நாளுக்குநாள் அதிகரித்து செல்கின்றதே தவிர, எதிர்காலங்களில் அது குறைவடைவதற்கான சாத்தியங்களை காணவில்லை.

அந்தவகையில் முஸ்லிம் பெண்கள் ஆடை அணிவதில் இருந்த சுதந்திரமும் இன்று பறிக்கப்பட்டு அதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றதென்றால், இன்னும் ஐம்பது வருடங்ககளுக்கு பின்பு இந்த நாட்டில் எமது முஸ்லிம் சமூகத்தின் நிலை என்ன ?

எதிர்காலங்களில் மார்க்க கடமைகளை மேற்கொள்வதற்கும், அல்குரானை ஓதுவதுக்கும் சுற்றுநிரூபம் மூலமாக தடை ஏற்படுத்தப்படமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது ?

ஏப்ரல் 21 இல் நடைபெற்ற வண்முறை சம்பவத்துக்கும் முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது ?

சிங்கள கடும்போக்குவாதிகள் கட்டம் கட்டமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அதற்காக தென்னிலங்கையின் அப்பாவி சிங்கள இளைஞ்சர்கள் மத்தியில் முஸ்லிம் விரோத பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முஸ்லிம்கள் பற்றிய நிலைப்பாட்டில் இந்த நாட்டு சிங்கள மக்கள் மத்தியில் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்தது போன்ற மனோநிலை இன்றுள்ள சிங்கள மக்கள் மத்தியில் இல்லை. நாளுக்குநாள் சந்தேகப்பார்வை அதிகரித்தவன்னமே உள்ளது.

சிங்கள இனவாதிகளும், இனவாத கட்சிகளும் மற்றும் புதிதாக அரசியலுக்குவர ஆசைப்படுபவர்களும் பிரபலம் அடைவதற்காகவும், சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்காகவும் முஸ்லிம் மக்களை ஓர் கேடயமாக பயன்படுத்தி அரசியல் செய்கின்றார்கள்.

இதனை புரிந்துகொள்ளாத அப்பாவி சிங்கள இளைஞ்சர்கள், இந்த அரசியல்வாதிகள் கூறுவதெல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றார்கள்.

இதனை விளங்கிக்கொள்ளாத எமது முஸ்லிம் சகோதரர்கள் இன நல்லிணக்கம் என்றும், இன ஒற்றுமை என்றும், தங்களது பெருந்தன்மையை வெளிக்காட்டுவதாக கூறிக்கொண்டு உச்சி குளிர்ந்தவர்களாக அடிமைத்தனத்தை வெளிப்படுத்தினார்கள்.

அதாவது கடந்த விசாக் பண்டிகைக்காக விசாக் கூடுகளை அமைத்து கொடுத்ததோடு, சில சகோதரர்கள் ஒருபடி மேலே சென்று புத்தர் சிலைகளை சுத்தம் செய்து கொடுத்ததும் சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவியது.

எம்மவர்கள் நல்லிணக்கத்தினை வெளிப்படுத்தி இரண்டு வாரங்கள் செல்லாத நிலையில், அதற்கு பரிசாக எமது பெண்களின் ஆடைகள் அணிவதற்கு இருந்த சுதந்திரத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள்.

நாங்கள் என்னதான் நல்லினக்கத்தினை வெளிப்படுத்தினாலும், எமது இஸ்லாமிய மார்க்கத்தை கைவிடும் வரைக்கும் அவர்களின் இனவாத செயல்பாடுகளுக்கு ஓய்வு இருக்காது. அது ஒவ்வொரு புதுப்புது வடிவத்தில் வந்துகொண்டே இருக்கும்.

இவ்வாறான நிலையில் நீல கட்சிகள்தான் இதனை செய்தார்கள் என்றும், பச்சை கட்சிதான் இதற்கு பொறுப்பு என்றும் நாங்கள் பட்டிமன்றம் நடாத்துவது எங்களது அறியாமையாகும். இனவாத செயல்பாடுகளில் அவர்கள் எல்லோரும் ஒன்றுதான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -