2019.06.23 ஆம் திகதி சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் இஸ்மாயில் இக்தார் தலைமையில் இடம்பெற்ற பிரதேச விளையாட்டு விழா 2019 என்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தன்னுடைய அரசியல் பிரவேசத்துக்கு முதல் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் சமூகசேவை சார்ந்த செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்டதன் ஊடாக பெற்ற அனுபவமே இவ்வாறு அரசியல் நீரோட்டத்தில் இணைய காரணமாக இருந்ததாகவும் அரசியலில் இணைந்துகொண்டதனூடாக தன்னால் முடிந்த அத்தனையையும் ஊருக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் செய்ததாகவும் தெரிவித்தார்.
இப்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்பதட்க்கு தங்களது பாரிய முன்னெடுப்புகள் பிரதான காரணமாக அமைந்தது என்று தெரிவித்த ஜெமீல்,மாகாணசபை உறுப்பினராக இருந்த காலப்பகுதியிலேயே சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த உள்ளுராட்சிமன்றத்துக்காக, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கிழக்குமாகாண சபையில் தனிநபர் பிரேரணை ஒன்றைக்கொண்டுவந்து அதனை நிறைவேற்றி குறித்த ஆவணத்தை பள்ளிவாசல் தலைமையிடம் ஒப்படைத்ததாகவும் தன்னுடைய அனைத்து அரசியல் செயற்பாடுகளையும் நிறுத்திவிட்டு சுற்றியிருந்த ஆதரவாளர்களை போராட்டத்தில் இணைந்து செயற்படுமாறு பணித்ததாகவும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் தெரிவித்தார்.
நான் வாழும் பிரதேசம் எனது சமூக என்று வரும்போது அதற்காக அனைத்தையும் துறந்து அதற்காக உயிரையும் துச்சமாக மதித்து போராட எப்போதும் தயங்கியதில்லை என்று தெரிவித்த ஜெமீல், சாய்ந்தமருது மாளிகைக்காடு இளைஞர் பேரவை என்ற அமைப்பு தற்போது களத்தில் இருப்பதாகவும் அதற்கு தன்னால் முடிந்த அத்தனையையும் செய்வேன் என்றும் தெரிவித்தார்.
ஊரையும் சமூகத்தையும் பிழையாக வழிநடத்துபவர்கள் விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அண்மையில் நமது நாட்டிலும் விசேடமாக கல்முனையிலும் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலை நல்ல பாடத்தைத் தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தல் ஒன்று நடைபெறுமாக இருந்தால் அது சாய்ந்தமரருதில் ஏற்படுத்தப்படவுள்ள நகரசபையிலேயே நடைபெறும் என்றும் இப்போது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக விசேடமாக கல்முனையை கபளீகரம் செய்ய எத்தனிக்கும் இனவாத துறவிகளுக்கும் எங்களது உறவுகளது ஊயிர்களையும் உடமைகளையும் காவுகொண்ட கருணா போன்ற பயங்கரவாதிகளுக்கும் எங்களது ஒற்றுமையை காட்டுவதனூடாக சமூகத்தை பாதுகாக்கவேண்டிய தேவையுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அமைப்பின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.லத்தீப்,கல்முனை மாநகரசபை உறுப்பினர் திருமதி நஸ்ரின் அமீன்,காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் பஸ்மிர் மற்றும் சாய்ந்தமருது இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ரீ.எம்.ஹாறூன் உள்ளிட்டவர்களும் சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
போட்டிகளின் பங்குகொண்டு வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.