இது பற்றி உலமா கட்சி தெரிவித்துள்ளதாவது, அன்பையும் கருணையும் போதிக்கும் பௌத்த மத தலைவரான இவர் இனங்களுக்கொடையில் முறுகல்களை ஏற்படுத்தும் வகையில் ஒரு இனத்துக்கு மட்டும் சார்பாக நடந்து கொள்கிறார்.
கல்முனை தேரரை நாம் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக அறிவோம். மிகவும் நல்லவராகவே நாம் அவரை கண்டோம்.
2010ம் ஆண்டு பொதுத்தேர்தலில் எம்மோடு அவரும் இணைந்து தேர்தலில் போட்டியிடும் அளவு அவரை நாம் கவுரவித்தோம். அரசியல் ரீதியிலான முகவரியை அவருக்கு பெற்றுக்கொடுத்தது உலமா கட்சியாகும்.
ஆனால் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஓர் இனத்துக்கு மட்டும் ஆதரவான செயற்பாட்டாளராக மாறியமையை காணக்கூடியதாக இருந்தது.
கல்முனை பிரதேச செயலக பிரச்சினை என்பது இனங்களுக்கிடையில் கசப்புக்கள் இன்றி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதனை ஆர்ப்பாட்டம், கூப்பாடு, உண்ணா விரதம் போன்ற செயற்பாடுகள் மூலம் தீர்க்க முணைவது தவறாகும்.
கல்முனை உப பிரதேச செயலகம் என்பது சட்டத்துக்கு முரணாக புலிகளின் ஆயுதத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதன் எல்லைகள் நியாயமாக இடப்படவில்லை. இது சம்பந்தமாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கல்முனை விகாராதிபதி இதில் தலையிட்டு உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததன் மூலம் கல்முனை முஸ்லிம் தமிழரிடையே பகையை ஏற்படுத்த முனையும் பேரினவாத செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
ஆகவே கல்முனை விகாராதிபதி அவர்கள் தனது உண்ணா விரதத்தை கைவிட்டு சமூகங்களுக்கிடையில் அமைதியையும் ஒற்றுமையையும் நீதியை நிலை நாட்ட முன் வர வேண்டும்.