நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இன முரன்பாடுகளைக் களைந்து அனைத்து சமூகத்தினரும் ஒன்றினைந்து வாழும் நாடாக எம் தேசம் மலர்வதற்கு இப்புனிதத் திருநாளில் பிராத்திப்போம் என முஸ்லிம் சமய, கலாசார, தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசாரச் செயலாளருமான அஸ்வான் ஷக்காப் மௌலானா விடுத்துள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;"புனித நோன்பின் முக்கியத்துவத்தை இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் விளங்கி, அதற்குரிய மரியாதையை வழங்கி வருவதை நாடு முழுவதும் கான்கின்றோம். பொதுவாக நோன்பின் தார்ப்பரியத்தை முழு உலகமும் அறிந்து வைத்துள்ளது. அந்தளவுக்கு அதன் அடிப்படை அம்சங்கள் உலகில் உள்ள அனைத்து மக்களது உள்ளத்தையும் ஈர்த்திருக்கிறது.
இலங்கை முஸ்லிம்களாகிய நாம் எமது இஸ்லாம் மார்க்கம் காட்டும் உண்மையான வழிமுறையில் நின்று எம்மிடையே காணப்படும் கருத்து முரண்பாடுகளை புறந்தள்ளி, பரஸ்பரம் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். தாய் நாட்டின் மீது பற்றுக்கொள்வதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதற்காக நாம் உழைக்க வேண்டும். அத்துடன் நோன்பு தரும் படிப்பினைகளோடு தனித்துவமான இஸ்லாமிய கோட்பாடுகளைப் பின்பற்றி, ஏனைய சகோதர மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு உறுதி பூணுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -