நாம் மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டிய காலகட்டத்தில் நாமிருக்கிறோம் -றியாழ்.

எம்.என்.எம்.யாஸீர் அறபாத், ஓட்டமாவடி-

ற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் தலைமைகள் நிதானமாகச் செயற்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்குடாத்தொகுதி அமைப்பாளருமான கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் பேரினவாதிகளின் செயற்பாடுகள் வருத்தமளிப்பதுடன், சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாட்டின் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும் காரணியாக நாம் பார்க்கிறோம்.

முஸ்லிம் பேர் தாங்கிய சிறு குழு மேற்கொண்ட தாக்குதலால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளியாகப் பார்ப்பதில் என்ன நியாயமிருக்கிறது? முஸ்லிம் சமூகத்தை நோக்கி இனவாதத் தீ பற்றவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், சமூகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அவசரமாக தங்களின் அமைச்சுப்பதவிகளை இராஜனாமாச் செய்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை நாம் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச்சரியான முடிவாகப் பார்க்கிறோம்.

அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்படாதிருந்திருந்தால், சமூகம் பாரிய தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்கலாம். அதனைத் தடுப்பதற்காகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் சிரஷ்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் ஒன்றுபட்டு, இவ்வாறான தீர்மானத்திற்கு வந்திருந்தனர். இவர்களை ஒன்றிணைத்து இந்த பணியை முன்னெடுத்துச்செல்வதில் முக்கிய பாத்திரத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை றவூப் ஹக்கீம் வகிப்பதும், அதற்கு அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பதும் சமூகத்தின் பார்வையில் சிறந்த நகர்வுகளாகும்.

இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தைப் பாதிப்புகளிலிருந்து விடுவித்து, கடந்த காலங்களைப்போன்று இந்த நாட்டில் சமாதானத்துடனும் சகல இனங்களுடன் இணைந்து வாழ்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ளும் போது, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமே தவிர, தனிப்பட்ட ரீதியாகச் செயற்பட முற்படுவதும், ஆக்ரோசமாக கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதும் ஏனைய நடுநிலையான பெரும்பான்மை மக்களையும் விசனம் கொள்ளச்செய்வதாக அமைந்து விடக்கூடாதென்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறான நிலைமைகளில் சமூகத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு ஏனையவர்களின் இனவாதக் கருத்துகளுக்கு தீனி போடும் வகையில் நம் சமூகத்தவர்களும் பதில் கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்வதைத் தவிர்ந்து, நிதானமாக நிலைமையைப் புரிந்து நடக்க வேண்டும்.

அத்துடன், தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கிடையிலான ஒற்றுமையைப்போன்று தொண்டர்களும் ஒற்றுமைப்பட்டு அவர்களின் கரங்களைப் பலப்படுத்தி, எமது சமூகத்தின் பாதுகாப்கை உறுதிப்படுத்துவதற்காக ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், இந்நிலைமைகள் விரைவாக மாற்றம் பெற்று முஸ்லிம் சமூகம் நிம்மதியாக இந்த நாட்டில் வாழும் சூழல் ஏற்பட வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்குடாத்தொகுதி அமைப்பாளருமான கணக்கறிஞர் எச்.எம்.எம். றியாழ் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -