இது சம்பந்தமான ஊடகவியலாளர் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது,
இன்றைய முஸ்லிம் சமூகம் யார் தனது நண்பன் யார் எதிரி என்பதை புரிந்து கொள்ள முடியாத அரசியல் வங்குறோத்தில் உள்ளது.
முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சியை குற்றம் சாட்டுவோர் தாக்கியவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய, சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தாத இந்த அரசை குற்றம் சாட்டாமல் அதனை ஜனாதிபதி மைத்திரி பக்கம் திசைதிருப்பி ஐ தே க அரசை பாதுகாக்க முயல்வது மிக மோசமான செயலாகும்.
பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது போல் முஸ்லிம் பெண்களின் ஆடை சுற்று நிரூபத்தை வெளியிட்டவர்கள் பிரதமர் ரணிலின் கட்சிக்காரர்கள் என்பதால் இத்தகைய இனவாதத்துக்குரிய பொறுப்பை பிரதமர் ரணிலே ஏற்க வேண்டும் என சொல்ல ஏன் முஸ்லிம் சமூகத்தால் முடியவில்லை?
பெண்களின் ஆடை விடயத்தில் சாரி, ஒசாரி என்ற வார்த்தைகளை இடம் பெற செய்ய முடியுமாயின் அதனுடன் அபாயா என்ற ஒரு வார்த்தையை இணைப்பது ஒரு கஷ்டமான செய்ற்பாடா?
அல்லது சாரி, ஒசரி என்ற வார்த்தைகளையும் நீக்கிவிட்டு பொதுவாக பெண்கள் தமது சமய வரம்புகளுக்கு உட்பட்ட கண்ணியமான ஆடை அணிய வேண்டும் என்றாவது சுற்றறிக்கை வெளியிட ஆளும் ஐ தே க முன் வர வேண்டும்.
கண்ணியமான ஆடை என்ற வார்த்தைக்கு பல அர்த்தம் உண்டு. மினி ஸ்கேட் போட்டு செல்லும் பெண்ணிடம் எது கண்ணியமான ஆடை என கேட்டால் மினிஸ்கேட் என்றுதான் சொல்வாள்.
இப்படியான வார்த்தை ஜாலங்களால் பாதிக்கப்படப்போவது முஸ்லிம் பெண் ஊழியர்கள்தான்.
ஆகவே ஐ தே க அரசு மேலும் மேலும் தனக்கு வாக்களித்த 99 வீத முஸ்லிம்களுக்கு விரோதமான இனவாத போக்கை கைவிட்டு உடனடியாக பெண் அரச ஊழியர்களுக்கான ஆடை சுற்று நிருபத்தில் அபாயாவையும் அணிய முடியும் என்பதை உள்ளடக்குமாறு முஸ்லிம் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.