இத்திறப்பு விழா நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபை உருப்பினர் திரு. ராஜ் அசோக்கின் ஏற்பாட்டின் கீ்ழ் புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்மைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் இணைப்பு செயலாளரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளருமான திரு. கணபதி நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் மாகாண சபை உருப்பினர்களான இபிரதி தலைவர் உதயகுமார்இ உதவி நிதி செயலாளர் திரு.சோ.ஸ்ரீதரன்இபொது செயலாளர் திரு. பிலிப்இடிரஸ்ட் நிறுவன தலைவர் திரு. புத்திரசிகாமணிஇமகளிர் அணி தலைவி திருமதி.சரஸ்வதி சிவகுரு மற்றும் உபதலைவர் .திரு ராம் ஆகியோருடன் இணைந்து மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. டிரோன் ரத்நாயக்க கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த திரு. க . நகுலேஸ்வரன்அவர்கள் சிறுவர்களின் அறிவை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கமும் புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் .பழனி திகாம்பரமும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.இவ்வாறான நவீன முறையில் உள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையகளை மலையக பகுதியில் அமைபதற்கான வேலைத்திட்டமும் அமுல்படுத்தி வருவதாகவும் இவ்வருடத்தை அபிவிருத்தி வருடமாக புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் அமுல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் இச்சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினை உரிய முறையில் பயன்படுத்தி நமது எதிர்கால தலைமுறையை சிறந்த சிந்தனையில் செயல்படவழிவகுப்துடன் பாடசாலை கல்வி நடவடிக்கையின் முதற்கட்டமாக இங்கு சிறந்த கல்வி நடவடிக்கையுடன் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் முக்கியதுவம் வழங்கப்படும்.மேலும் இச்சிறுவர் பராமரிப்பு நிலையத்துடன் சிறுவர் பூங்கா அமைப்பதற்காகவும் மற்றும் தளபாடம் வழங்குவதற்காகவும் 2 மில்லியன் ரூபாய் நிதியை மேலும் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.