நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, சிறப்பு அதிதியான இந்திய தூதரகத்தின் அபிவிருத்தி அதிகாரி டி. சி. மஞ்சுநாத், “ட்ரஸ்ட்” நிறுவனத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி மற்றும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், எம். ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன் உட்பட முக்கியஸ்தர்கள் வரவேற்கப்படுவதையும், வீடு ஒன்றை திறந்து வைத்து, பழமரக் கன்றுகளை நாட்டி வைப்பதையும், பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்படுதையும், அதிதிகள் உரையாற்றுவதையும், “மகாத்மா காந்திபுரம்” கிராமத்தின் தோற்றத்தையும் படங்களில் காணலாம்.
மகாத்மா காந்திபுரம் வீடமைப்புத் திட்டத்தின் பயனாளிகளுக்கு மரகன்றுகளை விநியோகிக்கும் நிகழ்வு
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரத்தின் ஆலோசனையின் பேரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 400 தனி வீடுகளைக் கொண்ட :மகாத்மா காந்திபுரம்” வீடமைப்புத் திட்டத்தின் பயனாளிகளுக்கு மரகன்றுகளை விநியோகிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...