கல்முனை அல்மிஸ்பா மகா வித்தியாலய பெண் உப அதிபருக்கு இராணுவ கெடட் அதிகாரியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று(10) நோன்பு விடுமுறையின் பின்னர் முஸ்லீம் பாடசாலைகள் 2 ஆம் தவணைக்காக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இவ்அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வழமை போன்று பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த பெண் அதிபர் தயாரான நிலையில் அநாமதேய தொலைபேசி அழைப்பு மற்றும் இனந்தெரியாத சில நபர்களை பாடசாலை முன்றலுக்கு அழைத்து வந்து அப்பாடசாலையில் கல்வி கற்பிப்பதாக தன்னை இனங்காட்டிய இராணுவ கெடட் அதிகாரி அச்சுறுத்த முயன்றுள்ளார் .
இதனை அடுத்து உப அதிபர் அச்சம் காரணமாக பாடசாலைக்கு செல்லவில்லை. மேலும் குறித்த பாடசாலைக்கு உப பெண் அதிபருக்கு ஆதரவு தெரிவித்து ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலையில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இராணுவம் மற்றும் பொலிஸ் குறித்த பாடசாலைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்குறித்த அச்சுறுத்தலானது புதிய அதிபர் ஒருவரை அப்பாடசாலைக்கு நியமித்ததை அடுத்தும் பாடசாலையின் வளர்ச்சியை தடுக்கும் முகமாகவும் இடம்பெற்றுள்ளது.
அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட உப பெண் அதிபர் கல்முனை கல்வி வலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள் உரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.