பொசொன் தின நிகழ்வை இம்முறை கல்முனைப்பிராந்தியத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராணுவத்தினருடன் இணைந்து முஸ்லிம் தமிழ் சிங்களப் பொதுமக்கள் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இன்று(15) முதல் காரைதீவு சாய்ந்தமருது கல்முனை பாண்டிருப்பு மருதமுனை பெரியநீலாவணை வரைவீதியெங்கும் பௌத்தகொடிகளால் அலங்கரித்து பொசொன் வெளிச்சக்கூடுகளையும் கட்ட ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இராணுவத்தின் கல்முனைப்பிராந்திய பொறுப்பதிகாரி மேஜர் தர்மசேன சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் ஏற்பாட்டுக்குழுக்கூட்டமொன்றை நேற்றுமுன்தினம் நடாத்தினார்.
கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரும் சமுகமளித்திருந்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல்நிருவாகத்தினர் வர்த்தகர் சங்கத்தினர் என பல தரப்பட்டவரும் கலந்துகொண்டனர்.
இம்முறை பொசொன் தினவைபவத்தை இக்கல்முனைப்பிராந்தியத்தில் வெகுசிறப்பாக நடாத்துவதென முடிவாகியது. அனைவரும் ஒத்துழைப்பது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை கல்முனை சுபத்ராராமய விகாரையில் ஞாயிறு பொசொன்தினத்தன்று விசேட பூஜைவழிபாடுகள் தம்மஉரை போன்ற நடாத்தப்படவிருக்கின்றன. தன்சல நிகழ்விற்கும் ஏற்பாடாகியுள்ளது.