எமது நாடு ஜே.வி.பி முதலாவது சோசலிச சமத்துவ கொள்கை முன்வைத்து இந்நாட்டு இளைஞர்கள் யுவதிகள் அக்கொள்கையின் கவரப்பட்டனர். சோசலிச கொள்கையில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. கல்விப் பொதுத்த தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த சகலருக்கும் பல்கலைக்கழக அனுமதி வழங்கப்பட வேண்டும்.
அரச சேவைக்குள் சகல மொழிகளும் உள்வாங்கப்பட வேண்டும்.மக்களுக்கு நியாய விலையில் நுகர்வுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் .விவசாயிகளுக்கு நிலம் கொடுக்கப்பட வேண்டும். எல்லோருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்றால் இனப்பிரச்சினை இருக்காது என்று அவர்கள் முன்வந்த போது அவர்களுக்கான சரியான தீர்வு கிடைக்க வில்லை அதனால் அவர்கள் ஆயுத கிளர்ச்சியாளராக மாறி, பல துன்பங்களை அனுபவித்து விட்டு தற்போது அரசியல் கட்சியாக செயற்படுகின்றனர் .
தமிழர்களின் கல்வி ,வேலைவாய்ப்பு உட்பட பல விடயங்களில் ஓரம் கட்டப்பட்டனர் .இந்த அநியாயத்தை ஈழத்தமிழர்களின் தலைவர்கள் அரசிடம் கேட்டனர்.ஆனால் அதனை அரசு புறக்கணித்தது.ஈழத்து காந்தி என அழைக்கப்பட்ட செல்வா மற்றும் தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் போராடினார்கள்.இந்த அகிம்சா வழி போராட்டையும் இலங்கை அரசு மதிப்பளிக்காததனால் தமிழர்கள் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் நடந்தன.
1956 தொடக்கம் காலத்திற்கு காலம் அரசு ஆதரவுக் குழுக்களுடன் சிங்கள இனவாதத்தை பேசுகின்றவர்கள் இராணுவ, பொலிஸ் பாதுகாப்புடன் தமிழர் மீது தாக்குதல் நடாத்தினார்கள.; இதில் தமிழ் இனம் உயிரிழப்புகளையும் சொத்திழப்புகளையும் சந்தித்தனர். இது 1983 ல் உச்சம் அடைந்தது .மற்றும் குடியேற்றத்தின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று பேரினவாதிகள் கூறினார்கள். இதனால் அக்கால கட்டத்தில் தமிழ் இடங்களுக்கு சிங்களப் பெயர் சூடப்பட்டது அதே போன்று சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றன.
அதே போன்று1958 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தின் பின்னர் விடுதலைப்புலிகள் தனிநாட்டு கோரிக்கையின் முன்வைத்து போராடினர்.
இத்தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1915 ம் ஆண்டு முஸ்லிம் சிங்கள இனக்கலவரம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. இதில் முஸ்லிம் பள்ளிவாயலுக்கு முன்னால் கண்டி பெரஹரா அமைதியாக செல்ல வேண்டும் என்று முஸ்லிம்கள் கூறியதனால் இக்கலவரம் வெடித்துள்ளது. இதில் முஸ்லிம்களின் பொருளாதாரம் உடமைகள் என்பன இலக்கு வைக்கப்பட்டுள்ளது . .
2001 ம் ஆண்டு ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்கா இருந்த காலத்தில் மாவனல்ல பகுதியில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இனமோதல் ஏற்பட்டது .இங்கு முஸ்லிம் மக்களின் சொத்துக்களை தீ வைத்தல், கொள்ளையிடல் என்பன இடம்பெற்றன.இக்கலவரம் மாவனல்லையை அருகாமையிலுள்ள அரநாயக்க,திம்பிட்டிய, கெம்மாத்துகம,கனேத்தன்ன போன்ற இடங்களுக்கும் பரவியது.

இக்கலவரம் நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.மாவனல்லை முஸ்லிம்களுக்காக நாட்டின் பல இடங்களில் முஸ்லிம்கள் ஹர்த்தால் செய்தனர்.கடை அடைத்து ஊர்வலம் சென்றனர்.மேலும் வெளிநாட்டு பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தியாகவும் மானவல்லை இடம்பிடித்தது.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் ஜனாதிபதியாக மஹி;ந்த ராஜபக்ச இருந்து காலத்தில் 2014 ம் ஆண்டு ஜுன் மாதம் அளவில் பேருவலை அளுத்கம போன்ற பகுதிகளில் பேரினவாத மதவாதிகளால் முஸ்லிம் சிங்கள இனக்கலவரம் இடம்பெற்றது.

இதிலும் முஸ்லிம்களின் உடமைகள் இலக்கு வைக்கப்பட்டது.
அதன்பின்னர் மக்கள் நல்லாட்சிக்கா சிறுபான்மையினர் வாக்களித்து ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனாவை கொண்டு வந்தனர்.

இவருடைய காலத்தில் பாரிய அழிவை ஏற்படுத்திய முஸ்லிம் சிங்கள இனக்கலவரமாக கண்டி, திகனவும் தற்போது குருநாகல் புத்களம் நகரை அண்டிய பகுதிகளில் பாரிய பொருளாதார சேத அழிவை ஏற்படுத்திய கலவரமாகவுள்ளது.
வட கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் முஸ்லிம்களின் பொருளாதார ரீதியாக முன்னேறி வருகின்றார்கள் அது மட்டுமன்றி முஸ்லிம்களின் கல்வியும் முன்னேறி வருகின்றது.முஸ்லிம்களின் பிறப்பு வீதம் அதிகரித்து வருகின்றது.மற்றும் முஸ்லிமகளின் பள்ளிவாயல்கள் அதிகரித்து வருகின்றது இதனை சிங்கள அடிப்படைவாத குழுக்கள் தமது இனம் அழிந்து விடுமா என்ற அச்சத்தின் காரணமாக இனக்கலவரங்களை அரசியல் துணைகளோடு முடுக்கி விடுகின்றனர்.இதில் அரசியல்வாதிகள் இனவாதத்தை தமது ஆயுதமாக பயன்படுத்தி வாக்குகளை பெறுகின்றனர்.இக்கலவரங்கள் மூலமாக ஆட்சி மாற்றத்தையும் விரும்புகின்றனர்.
இவ்வாறான இனக்கலவரங்கள் பல பயங்கரவாதிகளை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் சகலரையும் ஆட்டம்காண வைத்துள்ளது .இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற கொடுரமான தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலிலை வழிநாடாத்திய பொறியியலளார் இந்திய புலனாய்வுத்தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் அவர் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பேருவலை அளுத்தகம சம்பவத்தை தொடர்ந்தே அவர் இந்த சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் சேர்ந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

இவ்வாறானவர்கள் இலங்கையில் ஆக்கபூர்வமான பல செயற்பாடுகளுக்கு தேவைப்பட்டவர்கள் ஆனால் இந்த இனக்கலவரங்கள் அவர்களின் உணர்வுகளை பிழையான வழிநாடத்தல்குள் இட்டு செல்கின்றது.தற்போது நடைபெறுகின்ற இனக்கலவரங்கள் வரை எமது தேசத்தின் எதிர்கால சந்ததினரை ஒரு வன்முறையான இலங்கையராக மாற்றும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இலங்கையில் ஏற்படுத்தப்படும் அழிவுகளுக்கு இலங்கை அரச நஸ்டஈடு வழங்குகின்றது. இதுவும் இலங்கை மக்களின் வரிப்பணத்திலிருந்து பெறப்பட்ட பணம்.இதிலும் பல்லினம் மக்களின் வரிப்பணம் என்பதனை இந்த இனவெறியர்கள் விளங்கத்தவறுகின்றனர்.எமது தேசம் ஏற்கனவே கடன் சுமையிலுள்ளது.இனக்கலவரங்கள் மூலம் ஏற்படுத்தப்டும் நஸ்டங்கள் எமது நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும்.இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எமது தேசத்திற்கு வருவதற்கு தயங்குவார்கள். இதனால் எமது இளைஞர்கள் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகும் .எமது நாடு மிகவும் பயங்கரமான நிலைக்கு தள்ளப்படும் .
எமது நாட்டில் தமிழ் இளைஞர்கள் இந்தியா பாரத தேசத்தை அடிப்படையாக கொண்டு தமது ஆடைகளை அணிவதை காண முடிகின்றது.கறுப்பு நிற ஆடைகள்.

பெரிய பொட்டு வைத்து தன்னை பார்ப்பதற்கு ஒரு தமிழராக அடையாளப்படுத்துகின்றனர்.அதேபோன்று முஸ்லிம் இளைஞர்கள் சவூதியை அடிப்படையாக கொண்டு தாடிகள் பெரிய ஜுப்பா போன்ற ஆடைகளை அணிந்து தன்னை இஸ்லாமியராக அடையாளப்படுத்துவதாகவும் தமது கருத்துகளை ஒரு வித்தியாசமான கோணத்தில் தெரிவித்து வருவதாக எழுத்தாளர்களும ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர் அதாவது அவர்களின் வழமையான பாரம்பரிய கலாச்சார விடயங்களிலிருந்து மாறுபடுவதனை அவதானிக்க முடிகின்றது .அடிப்படை வாத குழுக்கள் தனித்து செயல்பட ஆரம்பிக்கின்றனர்.
அவர்களை தேவையானவர்கள் பயன்படுத்தி பயங்கரவாதியாகவோ தீவிரவாதியாகவோ மாற்றுகின்றனர் .எனவே எந்த இனத்திலும் அடிப்படை வாத குழுக்களை இல்லாமல் செய்யவதற்கான பொறிமுறை கொண்டுவரப்படல் வேண்டும் .இந்த மதவாதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு மறுவாழ்வு வழங்கப்படல் வேண்டும் .
இலங்கையில் ஒரு இனக்கலவரமோ அல்லது ஆயுத மோதலோ அல்லது பயங்கரவாத செயற்பாடுகள் ஏற்படும் போது அது இனம் சார்ந்ததாக சாயம் பூசப்பட்டு அந்த இனம் ஓடுக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதன்காரணத்தினால் இலங்கை பாரிய அழிவை சந்தித்தே வந்துள்ளது.எமது நாட்டின் முதுகெலும்பான பொருளாதாரம் தற்போது பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இந்த நாட்டில் ஒரு பிரச்சினை வருகின்ற போது அது இலங்கை நாட்டின் பிரசைகளின் பிரச்சினையாக பார்க்கப்பட வேண்டும் .

தமிழ் மக்களின் கல்வி ,சுகாதார மற்றும் இதர விடயங்களில் பாகுபாடு காட்டிய போதே அவர்கள் தனிநாட்டு கோரிக்கையினை முன்வைத்தனர் அதனை இந்நாட்டு அரசு தமிழ் மக்கள் இலங்கையை பிரிக்க போகின்றார்கள் என்ற கருத்தை முன்வைத்தே அவர்களை அடக்குமுறையை பயன்படுத்தியது.
அப்பிரச்சினையை ஏற்கனவே கலந்துரையாடல் மூலம் கொண்டு வந்து ,இலங்கை நாட்டு மக்களின் பிரச்சினையாக கருதி இருந்தால் அவர்களுக்கான தீர்வை முன்வைத்திருந்தால்,பல இலட்சம் கணக்கான மக்களின் உயிர்கள் மற்றும் உடமைகளை இழந்திருக்க மாட்டோம் மற்றும் ஜக்கிய நாடுகள் சபை வரை எமது நாடு கைகட்ட வேண்டிய நிலை வந்திருக்காது .
ஐந்து விரல்கள் ஒரே மாதிரியானவை யல்ல.ஆனால் ஜந்து விரல்களும் ஒன்று பட்டால்தான் ஒரு பொருளை ஒழுங்காக கையாள முடியும் என்பது எமது உடலிருந்தே அந்த ஒற்றுமை வெளிப்படுத்தப்படுகின்றது. அதே போன்று நான் என்று சொல்லும் போது எமது உதடு ஒட்டாது.நாம் என்று சொல்லும் போது தான் எமது உதடுகள் . இணைகின்றன.என்ற உன்னத உண்மை எமக்குள் உள்ளது.இந்நாட்டு வளர்ச்சியில் பல கலவரங்களை சந்தித்து வந்திருக்கின்றது.இனிமேலும் கலவரங்களை சந்திக்காது எமது நாட்டு மக்களை ஒரு தேசத்தின் பிள்ளையாக பாரக்கப்பட்டு இந்த நாட்டு மக்களுக்கான சமத்துவமான நீதி நியாயம் வழங்கப்பட வேண்டும்.

அ.ச.முகம்மது சதீக் நிருபர் (ஓட்டமாவடி)