தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை



ஐ. ஏ. காதிர் கான்-
வென்னப்புவ பிரதேச சபையினால் நடாத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான 2019.06.24 ஆம் திகதி இடப்பட்ட கடிதம் ஒன்று, வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் சுசந்த பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கொட்டுவ பிரதேசத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குறித்த கடிதத்தில் பிரதேச சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களை அடுத்து, இப்பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம் மக்கள் பொதுச் சந்தைப் பகுதிக்கு வருவதற்கு, ஏனைய மக்களும் வியாபார சமூகமும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், பிரதேச சபைத் தலைவர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்பிரகாரம், தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -