ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு கணனியும், சி.சி.ரி.வி. கமெராவும் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் (21) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
வாழைச்சேனை முஸ்தபா லெவ்வை பவுன்டேசன் அன்பளிப்பு செய்த குறித்த சி.சி.ரி.வி. கமெராக்களையும் கணனியையும் அதன் ஸ்தாபகர் எம்.பீ. பௌசுல் அமீன் வழங்கி வைத்தார் .
இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற பிரதியதிபர் மௌலவி எம்.ஏ.ஸீ.எம். புகாரி, பாடசாலையின் பிரதியதிபர் எம்.யூ.எம்.முகைதீன், ஆசிரியர் எம்.ஐ.றியாஸ் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.