அதனைத் தொடர்ந்து நாட்டு நிலமையும் அமைதியும் கருதி தங்கள் பதவிகளை ராஜினாமாச் செய்யவேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இதுவரை எந்தக் கட்டளையுமிடாத நிலையில் சற்று முன்னர் முகநூல்களில் வெளியான ஆளுநர் ராஜினாமா என்ற செய்தி தொடர்பில் இம்போட்மிரர் இணையத்தள செய்திக்காக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களை எமது செய்தி ஆசிரியர் தொடர்பு கொண்டு கேட்டபோது:
இல்லை இல்லை அப்படி எதுவும் இதுவரை நடக்க வில்லை ஜனாதிபதி விஷேட ஆணைக்குழு ஒன்று நியமிப்பதாக தெரிவித்துள்ளார். அவர்களின் முடிவின்பின்னரே ஏனையவை மேற்கொள்ள முடியும் அதுவரை வதந்திகளை நம்பவேண்டாம். நான் சற்று முன்னர் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடினேன் ஜனாதிபதி ராஜினாமாச் செய்வது தொடர்பில் எதுவும் பேசவில்லை என்று இம்போட்மிரருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மேல் மாகாண ஆளுநர் ஆஷாத் சாலி அவர்களைத் தொடர்பு கொண்டபோது அவருடை நெருங்கிய நண்பரும் மக்கள் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான சியாத் கபூர் குறிப்பிடுகையில் மேல் மாகாண ஆளுநர் உறுதியாக இருக்கிறார் சில்லறைத்தனமாக கோஷம்போடுவோருக்கு பயந்து செயல்படும் ஒருவரல்ல ஆளுநர்.
ஆளுநர் நியாயத்துக்கு மட்டும் அஞ்சாமல் குரல் கொடுப்பார் ஆனால் ராஜினாமாச் செய்யும் நோக்கமுமல்ல அப்படி இதுவரை ஜனாதிபதி கோரவும் இல்லை என்று தெரிவித்தார்.