டாக்டர் ஷாபிக்கு எதிரான முறைப்பாட்டுக்குரிய தாய்மார்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளனர்...

வைத்தியர் சாபி தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ள தாய்மார்கள் தொடர்பில் விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கு கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்திய அதிகாரியின் தலைமையில் குழுவொன்றை அமைப்பதற்கு நீதிமன்ற உத்தரவின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்தக் குழுவினால் எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட தாய்மார்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில் நீதிமன்றத்தினால் இந்த பரிசோதனைக் குழுவை அமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் கூறினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -