ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தினை சுடுகாடாக மாற்ற வேண்டாம் பொது மக்கள் கோரிக்கை.




ட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தினை சுடுகாடாக மாற்ற வேண்டாம் பொது மக்கள் கோரிக்கை.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்
ஹட்டன் நகரப்பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரபல்யமான விளையாட்டு மைதானமான டன்பார் விளையாட்டு மைதானத்தில் ; அண்மைக்காலமாக தகனக்கிரியைகளை செய்வதனால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.

குறித்த மைதானத்தில் இறந்தவர்களின் சடலங்களை எறிப்பதன் காரணமாக சுற்றுப்பற சூழலக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும்,மக்கள் செறிவான பகுதியில் இவ்வாறு தகனக்கிரியைகளை செய்வதனால் பொது மக்கள் மத்தியிலும் சிறுவர்கள் மத்தியிலும் அச்சம் நிலவிவருவதாகம் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

அச்சம் காரணமாக தமது பிள்ளைகள் மைதானத்திற்கு செல்ல மறுப்பு தெரிவிப்பதாகவும், இதனால் ஆரோக்கியமான சமூகம் ஒன்று உருவாகும் நிலை இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும், பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இறந்தவர்களை தகனம் செய்வதற்கு எத்தனையோ இடங்கள் காணப்படுவதாகவும் இவ்வாறு இருக்கும் போது இந்த இடத்தில் பிணங்களை எரிப்பதன் மூலம் இந்த மைதானம் சுடுகடாகமாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மைதானத்தில் அண்மைக்காலமாக தகனக்கிரியைகளை மேற்கொண்டு வருவதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அனுப்புவதற்கு மறுப்பதாகவும் விளையாட்டு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் பிள்ளைகளை அனுப்புவது விளையாட்டில் ஈடுபட்டு நல்ல தேக ஆரோக்கியத்தினை ஏற்படு;த்துவதற்கு ஆனால் இன்று இந்த இடத்தில் தகனக்கிரியைகளை செய்வதனால் அதிகாலை வேலையிலும் மாலை வேலையிலும் மாணவர்கள் வருவதற்கு அச்சம் கொள்கிறார்கள்.தேக ஆரோக்கியம் ஏற்படுத்திக்கொள்வதற்கு முதலில் மனவலிமை மிக முக்கியமானது. இந்த இடத்தில் இறந்தவர்களின் சடலங்களை எரிப்பதனால் அவர்களின் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டு சிறந்த முறையில் பயிற்சிகளையும் மேற்கொள்ள முடியாத ஒரு நிலை தோன்றுகிறது.

எனவே இது உரியவர்கள் கவனமெடுக்கவிட்டால் இதற்கு எதிராக எந்த விட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் நாங்கள் அதற்கு ஒத்தாசை வழங்குவோம் என ஒரு பெற்றார் தெரிவித்தார்;;.
எனவே பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இது அககறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -