ஒருவரின் குற்றம் குறைகளை மட்டும் சுட்டிக் காட்ட முயல்வது முறையான செயலல்ல - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்


முழு சமூகத்திற்காக நமது அரசியல்வாதிகள் ஒற்றுமையாக ஒன்றுபடும்போது ஒருவரின் குற்றம் குறைகளை மட்டும் சுட்டிக் காட்ட முயல்வது முறையான செயலல்ல - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்

அண்மையில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் 'தாருஸ்ஸலாம்' தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற போது நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சம்பந்தமாக பல உறுப்பினர்களின் கருத்துக்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டன. குறிப்பாக குறித்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றங்குறைகளை மட்டும் கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் முன் வைத்து அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அன்னாருக்கு ஆதரவாக நாம்பேசுவது பற்றியும் மீண்டும் யோசிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.

இக்கூட்டத்தின் கட்சியின் பிரதித்தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் மேற்படி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களைக் காரசாரமாகக் கண்டித்து தனது முழுமையான ஆட்சேபனையையும் தெரிவித்ததுடன் இன்றைய சூழ்நிலையில் எமது முழு சமூகத்தின் பிரச்சினையையும் இருப்பினையும் பற்றி இன்று கேள்விக்குறியாக இருக்கும் இத் தருணத்தில் தனிப்பட்ட அந் நபரைப்பற்றி நாம் இங்கு விமர்ச்சிப்பதும் ஊடக துறைக்கு தெரிவிக்க முனைவதும் முற்றிலும் பொருத்தமற்றது எனவும் தனது கருத்தை தெரிவித்து இதனை நமது கட்சியியைப் பற்றி மற்றவர்கள் நாளை நமக்கெதிராகக் விவர்சிக்கக்கூடும். எனவே ஒவ்வொருவரின் தனிப்பட்ட கோபதாபங்களையும் அவர்களின் விருப்பு வெறுப்புகளையும் எமது கட்சியின் முடிவாக நாம் இங்கு கொள்ள கூடாது எனவும் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் அவைகளை எதிர்து விவாதித்தார்.

இறுதியில் கபூர் அவர்களின் கருத்தை ஏனைய உயர்பீட உறுப்பினர்கள் பலரும் பரவலாக ஏற்றுக்கொண்டபின் தலைவரும் இணைந்து இதனை அங்கிகரித்து ஆமோதிப்பதாகவும் குறிப்பிட்டு அன்னவர்களுக்கு தொடர்ந்து அறிவுரை கூறும்போது நமது சகோதரனின் குறைபாடுகளை கூடுமானவரை மற்ற மக்கள் மத்தியில் மறைப்பதுதான் மனிதனின் மகத்தான பண்பாகும் எனவும் எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு போதித்துள்ளார் என்பதையும் எல்லோருக்கும் பொதுவாக இத்தருணத்தில் ஞாபகமூட்டி இந்நீண்ட விவாதத்தை நிறைவு செய்தும் வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -