ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி பொது மன்னிப்பை செல்லுபடியற்றதாக மாற்றுமாறு உயர் நீதிமன்றில் மனு.

ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி பொது மன்னிப்பை செல்லுபடியற்றதாக மாற்றுமாறு உத்தரவிடக் கோரி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தினால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர், நீதி அமைச்சர், ஜனாதிபதி செயலாளர், முன்னாள் பொலிஸ் மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர், வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்ட ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், கடும் வேலையுடன் கூடிய 19 வருட சிறைத் தண்டனையை 6 வருடத்தில் நிறைவடையும் சிறைத்தண்டனையாக குறிப்பிட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கையில், ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டது.

இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -