வைத்திய கலாநிதி என்.ஆரீப் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து....


சாய்ந்தமருதின் ஆதரவு
சாய்ந்தமருது மக்கள் தமக்கான தனியான உள்ளூராட்சி சபையைக் கோரிப் போராடுவது யாவரும் அறிந்ததே.
அது இன்னும் நிறைவேறாமல் இருப்பதன் பின்னணியில் இன்று கல்முனையில் எதிரொலிக்கும் கல்முனை உப பிரதேச செயலக சர்ச்சையும் பிரதானமான ஒன்றாகும்.
குறித்த செயலகத்தின் தோற்றம் எவ்வாறானதாக இருப்பினும் அது ஏதோவொருவகையில் மூன்று தசாப்தங்களை கடந்து வந்துவிட்டது.

எனினும் குறித்த உப பிரதேச செயலகமானது நிலத்தொடர்பற்ற முறையில் மக்களை உள்ளடக்கியிருப்பதானது வேடிக்கையானது. இவ்வாறு தான் கல்முனை தெற்கு மற்றும் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் நிருவகிக்கப்படுகின்றமை விநோதத்திலும் விநோதமாகும்.

இன்று அதனை பிரதேச செயலகமாக தரமுயர்த்த வேண்டுமென கல்முனை தமிழர்களும், புலிப்பயங்கரவாதிகளினால் நிலத்தொடர்பற்ற முறையில் அடாத்தாக உருவாக்கப்பட்டதனால் அதனை சட்டரீதியாக தரமுயர்த்தக்கூடாது என்று கல்முனை முஸ்லிம்களும் முறையே உண்ணாவிரதம் மற்றும் சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்துகின்றனர். இரண்டு பக்கங்களிலும் நியாயம் இருந்தாலும் அடிப்படையில் இனரீதியாக நிலத்தொடர்பற்ற நிர்வாக முறைமை உள்ள ஒரு பிரதேச செயலகம் என்பதால் தொடர்ந்தும் இன முரண்பாடு வருவதற்கே அது கால்கோளாகும்.

ஆதலினால் இரண்டு தரப்பாரும் ஒரு மேசையில் சந்தித்து இருபக்க விட்டுக்கொடுப்புடன் ஒரு சமரசத்திற்கு வரவேண்டும். பொதுவானதொரு எல்லையில் உடன்பாடு கண்டு பிராந்தியத்தின் அமைதிக்கும் இன ஒற்றுமைக்கும் பங்களிப்பு செய்யவேண்டும். அவ்வாறு இணக்கப்பாட்டுடன் அமையப்பெறும் இரண்டு செயலகபிரிவுகளிலும் பல்லின சமூகங்களும் உள்ளடங்கும். ஏற்கெனவே காரைதீவு மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுகளும் அவ்வாறே அமைந்து சுமூகமாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது
இது இவ்வாறு இருக்க, சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கையான தனியான நகரசபை இன்னும் மலராமல் இருப்பதற்கு இந்த சர்ச்சையே பிரதான காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த சர்ச்சை தீர்க்கப்படாமல் சாய்ந்தமருதுக்கு தனியான சபை வழங்கப்பட்டால் அது கல்முனைக்கு பாதிப்பாகும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. அது சரியா தவறா என்ற வாதப்பிரதிவாதங்களைத் தாண்டி இன்று அது புதிய பரிணாமத்தை எடுத்துள்ளது.
இந்த சர்ச்சையை வைத்து மூன்றாந்தரப்பினர் கல்முனையில் மீண்டுமொரு தமிழ் முஸ்லிம் விரிசலை ஏற்படுத்த முனைகின்றனர். அதற்கு தமிழ் மக்கள் இடங்கொடுக்கக் கூடாது. ஏனெனில் இங்கு வாழப்போவது தமிழ் முஸ்லிம் மக்களே தவிர சதிகார இனவாத மூன்றாந்தரப்பினரல்ல.
ஆக, இந்தப் பிரச்சினையானது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். உப செயலகம் இல்லாமலாக (வாய்ப்புக் குறைவு) வேண்டும் அல்லது முறையாக (நிலத்தொடர்புள்ள எல்லையுடன்) உருவாக்கப்பட வேண்டும். அதன் பிறகு சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபையைத் தடுப்பதற்காக சொல்வதற்கு எந்தக் காரணமும் இருக்காது.
அதேவேளை, எமது சபையைக் கோரும் மறுபுறத்தில் கல்முனக்கு எந்தப் பாதிப்பும் வருவதனை அனுமதிக்கமாட்டோம் என்பது எமது வாக்குறுதியாகும்.
எனவே, சாய்ந்தமருது மக்கள் தமது முழுமையான ஆதரவை கல்முனை சகோதரர்களுக்கு வழங்க வேண்டும். அது கல்முனையைப் பாதுகாக்கின்ற அதேவேளை, எமக்கான நகர சபையையும் உறுதிப்படுத்தும்.

#கல்முனையைக்காத்து_மருதூரின்_சபையை_மலரச்செய்தல்

குறிப்பு: நுனிப்புல் மேய்கின்ற மேதாவிகளுக்குப் புரியாது.

@ D N A
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -