மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி; அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- நான் கடந்த நான்கு வருட காலப்பகுதியில் எவ்வித பாகுபாடுமின்றி கோயில்கள் கிறீஸ்தவ தேவலயங்கள்,விகாரைகள்,பள்ளிவாசல்கள் என எல்லாவற்றிக்கும் நிதி ஒதுக்கியிருக்கிறேன்.அது பௌத்த மதமாக இருந்தாலும் சரி, இந்து மதமாக இருந்தாலும் சரி ,கிறிஸ்த்தவ மதமாக இருந்தாலும் சரி ,நான் வேறாக பார்ப்பது கிடையாது.ஏனென்றால் எல்லா மதங்களும் நன்மையை தான் போதிக்கின்றன.நான் இங்கு முதன் முதல் வந்த போது முன்னாள் நகர சபைத் தலைவர் இந்த ஆலயத்தின் கூரையினை புனரமைத்து தருமாறு கூறினார்.நான் அதனை செய்து கொடுத்தேன் அதனை தொடர்ந்து முன்னால் உள்ள முற்றத்தில் கற்கள் பதிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அதனையும் குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளேன்.
எதிர்காலத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் காரணம் ஒரு சிலர் செய்யும் தவறுகளால் நாம் எல்லோழரயும் ஒரே மாதிரி பார்த்துவிட முடியாது.நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் 1983 ஆண்டு நடைபெற்ற வன்செயல்கள் காரணமாகத்தான் தமிழ் மக்களில் பெரும் பாலானவர்கள் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசினார்கள்.அதே போன்று இன்று நடந்துள்ள சம்பவத்திற்கும் ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் குற்றச்சாட்டினோம் என்றால் அதனை செய்த துரோகிகளுக்கு சாதகமாகி விடும்.ஆகவே நாம் ஒரு போதும் அதனை செய்து விடக்கூடாது.இந்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு பிரிவினர் மிகவும் கவனமாக செயப்பட்டார்கள.; நாம் அவர்களுக்கு ஒத்தாசை வழங்க வேண்டும். அப்போது அவர்கள் எங்களை ஆராந்து பார்ப்பதற்கும் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கும், அது வசதியாக இருக்கும் அதன் நாம் பல சிக்கல்களிலிருந்து எம்மை பாது காத்துக்கொள்ளவும் முடியும். உங்களுக்கு தெரியும் கடந்த குண்டு வெடிப்பில் 250 மேல் இறந்துள்ளார்கள.; 500 மேல் காயமடைந்துள்ளார்கள்.இவ்வாறன சம்பவங்கள் மீண்டும் ஏற்படாது தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.என அவர் மேலும் தெரிவி;த்தார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சின் 35 லட்சம் ரூபா செலவில் ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் இன்டர் லொக் கற்கள் பதித்து புனரமைக்கப்படவுள்ள முற்றத்தினையும், ஹட்டன் நீக்ரோதாராராம விகாரையில் சுமார் 28 லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ள தர்சாலையின் கூரையும் வேலைகள் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த இரண்டு மதத்தலங்களின் தலைவர்களினால் அமைச்சர் திகாம்பரம் ஆசிர்வதிக்கப்பட்டனர்.
ஹட்டன் புனித திருச்சிலுவை ஆலயத்தின் நிகழ்வுகள் பொஸ்கோ விடுதி பொறுப்பான அருட் தந்தை குரூஸ் சேவியர் அவர்களின் தலைமையிலும்.நீக்ரோதாராராம விகாரையின் விகாரதிபதி தர்சனபதி மஹாகம விமல தேரர் தலைமையிலும் நடைபெற்றன.
இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன்,ராம்,ஹட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவரும் இந்நாள் உறுப்பினமான அழகு முத்து நந்தகுமார் அமைப்பாளரும் முன்னாள் அம்பகமுவ பிரதேச சபையின் தலைவருமான நகுலேஸவரன் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 35 இலட்ச ரூபா நிதியின் ஊடாக அட்டன் புனித திருச்சிலுவை தேவாலயத்தின் முன்றல் மற்றும் சுற்றியுள்ள பாதையை புனரமைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு 30-06-2019 இடம்பெற்றது. வண. பிதா சேவியர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் பி. திகாம்பரம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அவரோடு மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், எம். ராம், நகர சபை உறுப்பினர் டாக்டர் அழகமுத்து நந்தகுமார், தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். அமைச்சர் வரவேற்கப்படுவதையும் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு பணிகள் ஆரம்பித்து வைக்கப்படுவதையும், நிகழ்வில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.