புனித நோன்புப் பெருநாளைக் (ஈதூல் பித்ர்) கொண்டாடிக் கொண்டிருக்கும் என் இனிய உறவுகள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல் வாழ்த்தினை அன்பின் மலர்களாகத் தூவி பெருமிதம் அடைந்தவனாக
தாய்த்திருநாட்டில் எம் சகோதரர்களிடையே ஒற்றுமை மேலோங்கிக் காணப்படும் இப்புனித நாளில் இந்நிலை என்றும் தொடரவும் , இன மத எதுவித பேதங்களும் அற்றவர்ளாக நாம் அனைவரும் ஓர்நாட்டின் தாய் பிள்ளைகளே என்ற உயர் நிலையோடு உன்னதமாக வாழ்ந்திடவும்
நாட்டில் எம் சகோதர உறவுகளுக்கு ஏற்பட்டுள்ள அச்ச உணர்வு நீங்கவும் நிம்மதியான அழகான சூழல் உருவாகி நிம்மதிப் பெருமூச்சு விடவும் இறைவனிடம் கண்ணீர்மல்க இருகரமேந்திப் பிராத்தித்து இப்புனித நன்நாளை வெற்றி
கொள்வோமாக என தனது நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியை தெரிவித்தார்.