இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கிடையிலும் ஒற்றுமை வேண்டி காத்தான்குடி மக்கள் விஷேட நோன்பு நோற்பு...

எம்.பஹ்த் ஜுனைட்-
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கிடையிலும் சமாதானம் வேண்டியும் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் எதிர் நோக்கியுள்ள நெருக்கடி நீக்குவதற்காகவும் இறைவனிடம் வேண்டி காத்தான்குடி மக்கள் விஷேட நோன்பு நோற்று பிரார்த்தனை மேற்கொண்டனர்..
விஷேட நோன்பு நோற்றவர்களுக்காக காத்தான்குடி நகரசபை, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம் இய்யதுல் உலமா சபை ஆகியன இணைந்து ஒழுங்கு செய்த து ஆ பிரார்த்தனை மற்றும் இப்தார் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (17) காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும் ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது..

இவ் விஷேட நிகழ்வில் நகர சபை தவிசாளர், நகர சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள் மற்றும் பெரும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -