பொய்யான செய்திகளை காழ்ப்புணர்ச்சி கொண்ட ஊடகம் வெளியிட்டுள்ளது :


அல்தாப் ஹோட்டல் உரிமையாளர்

அபு ஹின்சா -

14 வருடங்களாக இலங்கையில் வாழும் பல்லின சமூகத்தை மட்டுமின்றி சர்வதேச பிரமுகர்கள் முதல் சுற்றுலா பயணிகள் வரை நல்ல வரவேற்பை பெற்ற எனது அல்தாப் ஹோட்டல் அண்ட் ரெஸ்டுறேன்ட் மீது அபாண்டமான குற்றச்சாட்டை ஒரு இனவாத இணையமும், சில காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழ் சகோதரர்களும் முன்வைத்திருப்பதாக அல்தாப் ஹோட்டல் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எம்.அமீர் தெரிவித்தார்.

அண்மைய சில நாட்களாக அல்தாப் ஹோட்டல் அண்ட் ரெஸ்டுறேன்ட் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் செய்திகளுக்கான மறுப்பறிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தனது அறிக்கையில்,

அண்மையில் எனது உணவகத்தில் பழுதடைந்த கோழியை வாடிக்கையாளருக்கு சாப்பிட வழங்கியதாகவும், அது உண்பதற்க்கு தகுதியில்லாமல் இருந்ததாகவும் குற்றம் சுமத்தி ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டிருந்தது. அந்த நாடகமானது இந்த நாட்டில் இனவாத்தைத்தை உருவாக்க முழுமூச்சாக செயட்பட்டுவரும் ஜேவிபி நியூஸ் எனும் இணையதளத்தில் எங்கள் மீது கரிபூசும் செயலாக வெளியிடப்பட்டிருந்தது.
அந்த ஜேவிபி நியூஸ் எனும் இணையதள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது குடும்பத்துடன் உணவருந்திக்கொண்டிருந்தபோது அதிலிருந்த ஒரு கோழித்துண்டு பழுதாகியிருந்ததாகவும் அதனை சுட்டிக்காட்டியபோது கடை ஊழியர்களும், நிர்வாகவும் சரியாக பதிலளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்கள். ஆனால் அந்த செய்தியில் வெளியிட்டுள்ள வீடியோ அவர்களின் சகல கூற்றையும் பொய்ப்பிக்கிறது.
பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டாக இருக்கிறது என்று நினைப்பது போல இவர்களின் செயட்பாடுகளும் அமைந்திருந்தது. தினசரி பத்திரிக்கை தாள் ஒன்றில் சுற்றிகொண்டுவரப்பட்ட வந்த கோழித்துண்டு எங்களுடைய தயாரிப்பு இல்லை என்பதை நாங்கள் அவர்களுக்கு எடுத்துக்கூறினோம். மிகப்பிரசித்தி பெற்ற எங்களுடைய வர்த்தக நிலையம் கடந்த 14 வருடங்களாக இப்பிரதேசத்தில் இயங்கி வருகிறது. எங்கள் வர்த்தக நிலையத்தின் பெயர் அச்சிடப்பட்ட உறைகளை மட்டுமே நாங்கள் பயன்படுத்துவோம். ஆனால் அவர்கள் தினசரி பத்திரிக்கை ஒன்றில் சுற்றிகொண்டுவந்த அந்த கோழித்துண்டு எங்கள் வர்த்தக நிலையத்துக்கு சொந்தமான தயாரிப்பு இல்லை.
மதுபோதையில் வந்து எங்கள் கடையில் பிரச்சினை செய்த அந்த நபர்கள் சுமார் ஒரு மணிநேரத்துக்கு முன்னர் வந்து வாங்கிச்சென்ற கோழித்தூண்டும் அவர்கள் திருப்பி கொண்டுவந்த கோழித்தூண்டும் வித்தியாசமானது. அவர்கள் குடும்பத்துடன் உணவருந்தியதாக சொல்கிறார்கள் ஆனால் அந்த வீடியோவில் நன்றாக தெரிகிறது அவர்கள் வீதியில் இருந்தே வீடியோ செய்துகொண்டு வருகிறார்கள். அவர்கள் கடையில் உணவருந்தவும் இல்லை. குடும்பசகிதம் வருகை தரவும் இல்லை.

எங்கள் தயாரிப்பில் குறைகள் இருப்பின் அதனை பொதுசுகாதார பரிசோதகர், சுகாதார நிறுவனங்கள், பொலிஸார் போன்றோரிடம் முறைப்பாடு செய்திருக்க வேண்டும் அதுவுமில்லாமல் வீதியில் பாதுகாப்புக்கு நின்ற இலங்கை ஆர்மி படை வீரர்களிடம் முறையிட சென்றது ஏன்? எனும் கேள்விக்கு விடைதேடினாலே இவர்களின் நிகழ்ச்சிநிரல் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.தர நிர்ணயம் செய்யப்பட்ட பொருட்களை கொண்டு தயாராகும் எமது உணவுப்பண்டங்களை பரிசோதிக்கும் வேலையை செய்வது பொதுசுகாதார பரிசோதகர்களா?அல்லது, சுகாதார நிறுவனங்களா? இல்லை வீதியில் பாதுகாப்புக்கு நின்ற இலங்கை ஆர்மி படை வீரர்களா?
பொய்யான செய்திகளை வெளியிடுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஜேவிபி நியூஸ் எனும் இணையதளம் இனவாத குழப்பங்களை உருவாக்க போட்ட திட்டமாகவே இதனை பார்க்க முடிகிறது. சர்வதேச பயிற்சி பெற்ற வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சமையற்கலை நிபுணர்களை கொண்டு உணவுதயாரிக்கும் எங்களின் பெயரை சீரழித்து வியாபாரத்தில் சரிவை உண்டாக்க போடப்பட்ட இந்த நாடகத்தை எங்கள் வர்த்தக நிலையத்தை நன்றாக அறிந்த எந்த தமிழ்,முஸ்லீம்,சிங்கள,கிறிஸ்தவ வாடிக்கையாளர்களும் நம்பமாட்டார்கள் என்பது எங்கள் நம்பிக்கை.
காழ்ப்புணர்ச்சியும்,வக்கிரமும் கொண்ட இந்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறு குறித்த செய்திகளை வெளியிட கூடாது என ஜேவிபி நியூஸ் எனும் இணையதளத்தை கேட்டுக்கொள்கிறேன். என மேலும் தனது மறுப்பறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -