ஹபாயா விடயத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -உயர்பீட உறுப்பினர் யக்யாகான்


டந்த காலங்களில் இந்த அரசாங்கம் எமது முஸ்லிம் மக்களின் கனிசமான அளவில் ஏறத்தாழ 99% அளவில் ஆதரவைபெற்று ஆடசி அமைத்தது .
இதன் போது முஸ்லீம் மக்களாகிய எங்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது மட்டுமல்லாமல், பல சலுகைகளையும்பெற்றுத்தருவோம் என மார்பு தட்டிக் கூறியது. அன்று முதல் இன்றுவரை கூறிக்கொள்ளும் அளவில் எதுவும்செய்ததில்லை. என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூக சிந்தனையாளரும் தொழிலதிபருமான ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்தார்.
குறைந்த பட்சம் இந்த அரசாங்கம் முஸ்லிம் பெண்களின் ஹபாயா விடயத்திலாவது கரிசனை காட்டி அதட்குரிய சுற்றுநிரூபத்தை வெளியிட்டு நடவடிக்கை மேற்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் அதை செய்ய இன்னும் தயாராகவில்லை.
இன்று பல முஸ்லீம் யுவதிகள் தமது வேலைத்தளங்களில் , பிரயாணங்களில் பல இன்னல்களையும் அதிகமானசிரமங்களை எதிர் நோக்குகின்றனர். இதனால் இலங்கையிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் எதிர் வரும்காலங்களில் இந்த அரசாங்கத்திட்கு ஆதரவு வழங்குவதா ? இல்லையா ? என்ற கேள்விக்குறியில் இருக்கின்றனர்.
இவர்கள் மீண்டும் ஆடசி அமைப்பதென்றால் முஸ்லிம்களின் சில அத்தியாவசிய விடயங்களில் கவனம்செலுத்தவேண்டும். அதில் ஒரு விடயம் தான் முஸ்லீம் பெண்களின் ஹபாயா விடயம் .இதனை சீர் செய்ய உடனடியாகசுற்று நிரூபத்தை திருத்தி எமது முஸ்லிம் பெண்கள் அரசாங்க வேலைகளுக்கு செல்ல எந்த ஒரு தடையும் இல்லாமல்நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்காக எமது தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அவருடன் இருக்கின்ற பல முஸ்லீம்தலைவர்கள் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். இந்த முயற்சி விரைவில் எமக்கு சாதகமாக அமைய வேண்டும். இதுஎங்களது முஸ்லிம் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பிரச்சினை இதற்கான தீர்வை உடனடியாகபெற்றுக் கொடுக்க வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்தோடு ஜனாதிபதி அவர்கள் ஒரு சுற்று நிரூபத்தை மிகவும் தெளிவாக வெளியிட்டார்கள் . முகத்தை மறைப்பதைமட்டும் தடை செய்தார்கள்.அதை விட்டு விட்டு மற்றவர்கள் எல்லோரும் ஹபாயா மற்றும் ஹிஜாப்பை தடை செய்யவேண்டும் என வாதிடுகின்றனர்.
இந்த பீதியை போக்க அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எக்காரணம் கொண்டும் முஸ்லீம் மக்களாகியநாங்கள் ஹபாயா மற்றும் ஹிஜாப் விடயத்தில் எந்தவிதமான விட்டு கொடுப்பும் செய்ய தயாரில்லை என்றும் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -